குரூப் 1 தேர்வு அண்மையில் நடைபெற்று முடிந்த நிலையில், 90 காலிப் பணியிடங்களுக்கான சமூக வாரியான ஒதுக்கீட்டு விவரங்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
உதவி ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு உயரிய பதவிகளுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி சார்பில் இந்தத் தேர்வு நடக்கிறது.
தேர்வு முறை
* முதல்நிலைத் தேர்வு
* முதன்மைத் தேர்வு
* நேர்காணல்
முதல்நிலைத் தேர்வு – பொதுப் பாடத்திட்டம் (175 கேள்விகள்), ஆப்டிட்யூட் தேர்வு (200 கேள்விகள்) – மொத்தம் 300 மதிப்பெண்கள். 3 மணி நேரம் தேர்வு நடைபெறுவது வழக்கம்.
1.60 லட்சம் பேர் தேர்வை எழுதினர்
இந்த நிலையில் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 வரை நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு, 2,38, 255 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 90 காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வுக்கு 2.38 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், இவர்களுக்கு 38 மாவட்டங்களிலும் 797 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சென்னையில் 124 மையங்களில் 38,891 பேர் குரூப் 1 தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில், தமிழ்நாடு முழுவதும் 1.60 லட்சம் பேர் தேர்வை எழுதி இருந்தனர்.
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வை எழுதத் தகுதியானவர்கள் ஆவர். இந்தத் தேர்வு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
என்னென்ன பணியிடங்கள்?
வ.எண் | பணியிடத்தின் பெயர் | காலி இடங்கள் |
1 | துணை ஆட்சியர் | 16 |
2 | துணை காவல் கண்காணிப்பாளர் | 23 |
3 | உதவி ஆணையர் (வணிக வரித்துறை) |
14 |
4 | துணைப் பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் |
21 |
5 | ஊரக மேம்பாட்டு உதவி இயக்குநர் |
14 |
6 | மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் |
1 |
7 | தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை மாவட்ட அலுவலர் |
1 |
மொத்தம் |
90 |
இந்த நிலையில், 90 காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கு, சமூக வாரியான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதை, https://tnpsc.gov.in/Document/English/ADDENDUM_4A.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/