தேனி மாவட்டம்  ராஜதானி சிக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் செந்தில்  கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த விஜயராஜ் என்பவரின் மகன் ராஜேஷ் கண்ணன் என்பவர் கேரளாவில் வேலை பார்த்து வந்துள்ளார். ராஜேஷ் கண்ணன் மற்றும் செந்தில் இருவரும் மைத்துனர்கள் செந்திலின் உடன் பிறந்த சகோதரி  முருகேஸ்வரி என்பவரை ராஜேஷ் கண்ணன் திருமணம் முடித்துள்ளார்.



இந்நிலையில் ராஜேஷ் கண்ணன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால் ராஜேஷ் கண்ணுக்கு தெரியாமல் அவரது மூத்த  மகளை திருமணம் முடித்து கொடுப்பதற்காக நிச்சயம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ராஜேஷ் கண்ணன் தனது மனைவி முருகேஸ்வரியிடம்  எனக்கு தெரியாமல் எப்படி என் மகனுக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்யலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோடு தனது மைத்துனர் செந்திலிடம் சென்று எதற்காக என் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்தீர்கள் என்று தொடர்ந்து இரண்டு முறை தகராறில் ஈடுபட்டுள்ளார்.


லாக்கப் மரணமடைந்த தினேஷ் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் - ஓபிஎஸ்




அப்போது அவரது கையில் மறைத்து வைத்திருந்த உருட்டுக் கட்டையால் (மம்மட்டி புடியால்) ராஜேஷ் கண்ணனை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ராஜேஷ் கண்ணன் உயிரிழந்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ராஜேஷ் கண்ணன் இறந்துவிட்டதாக இராஜதானி காவல் நிலைய வழக்கு எண் 64/17 பிரிவு 174 crpc @ 294b 302 IPC யின்படி 2.2.2017ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்ட பிண்பு இவ்வழக்கு விசாரணையை துரிதமாக முடிக்கப்பட்டு 25.7.2017 ஆம் தேதி இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.




இவ்வழக்கு தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கான  இறுதி கட்ட வழக்கு விசாரணை தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. குற்றம் நிரூபிக்கப் பட்டதால்  குற்றவாளி செந்திலுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் அபராதம் கட்டத்தவறினால் இரண்டு மாத கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிபதி விஜயா தீர்ப்பு வழங்கினார்.


Breaking News LIVE: சேலம் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்றவனுக்கு தூக்குத்தண்டனை - போக்சோ நீதிமன்றம்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண