குழந்தைகளை கோவிலுக்குள் அழைத்து பாலியல் சீண்டல் செய்த கோவில் பூசாரியை பொதுமக்கள் தாக்க வந்ததால் கோவில் கதவை பூட்டிக்கொண்ட பூசாரி. கோவிலுக்குள் இருந்த பூசாரியை காவல்துறையினர் மீட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் புகார்களும் ஆங்காங்கே நடந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. இதிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழ் நிலைகளை உருவாக்குவது, குறிப்பாக ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், “Good touch”, “bad touch” எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டிய கடமைகள் பெற்றோர்களுக்கு உள்ளது. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்தவ வேண்டிய கட்டாயம் உள்ளது.
இனி தி.மு.க. வழிதான்! சந்திரசேகர்ராவ் போட்ட புது ஸ்கெட்ச்! சென்னைக்கு வந்த பி.ஆர்.எஸ். நிர்வாகிகள்!
குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும்போது வெளியே விளையாட செல்லும்போது அதிக கவனம் கொடுக்க வேண்டும், நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை இது போன்ற பல்வேறு வகைகளில் குழந்தைகளை பாதுகாப்பதில் கவனமுடன் பெற்றோர்கள் செயல்பட வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளது. இத்தைகைய சூழல் உருவாகியுள்ள நிலையில்,
சிவகங்கை: சித்தியை மண்ணெண்னை ஊற்றி எரித்த கொடூரம், இளைஞருக்கு ஆயுள் தண்டனை!
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள இந்து சமய அறநிலைதுறைக்கு சொந்தமான பகவதி அம்மன் கோவிலில் திலகர் (வயது 70) முதியவர் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். எனவே நேற்று மாலை கோவில் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர், சிறுமிகளுக்கு இனிப்பு வழங்கி கோவிலுக்குள் அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுமி பதறி அடித்து கோவிலில் இருந்து வந்து நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அப்பகுதி மக்கள் கோவில் முன்பாக கூடியதை தொடர்ந்து, உறவினர்கள் தாக்க வந்து விடுவார்கள் என எண்ணி கோவில் பூசாரி கோவிலை பூட்டிக் கொண்டு கோவிலுக்குள் ஒளிந்து கொண்டார். இதனை அடுத்து பெரியகுளம் வடகரை காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் கோவிலை அடைத்துக் கொண்டு உள்ளே ஒளிந்திருந்த பூசாரியை அழைத்து கோவிலைத் துறந்து கோவிலுக்குள் விசாரணை மேற்கொண்டனர்.
Chennai Rains: "ரேஸ் ரோட் vs ரெயின் ரோட்" சென்னை சாலைகளை கேலி செய்த கார்த்தி சிதம்பரம்!
இந்த நிலையில் சிறுவர் சிறுமியரின் உறவினர்கள் பெருமளவு திரண்டு வந்து பூசாரியை தாக்கும் முயற்சியில் ஈடுபட முற்பட்டதால், காவல்துறையினர் கோவில் பூசாரி திலகரை பெரியகுளம் வடகரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியரின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பூசாரிதிலகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் சிறையில் அடைத்துள்ளனர்.