நாளொன்றுக்கு 1 லட்ச வரையிலான பயணிகள் மதுரை ரயில் நிலையத்தை பயன்படும் அளவிற்கு மறுசீரமைக்கப்பட்டு வருகிறது. தற்போது வரையில் 28% பணிகள் நிறைவு பெற்றுள்ளது என மதுரை எம்.பி சு வெங்கடேசன் பேட்டியளித்தார்.
மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் ரயில் நிலையத்தில் மதுரை எம்.பி ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை ரயில் நிலையத்தில் ரூபாய் 347 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கட்டுமான பணிகளை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மதுரை கோட்ட மேலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: ரயில்வே மறு சீரமைப்பு பணிகள் திட்டமிடப்பட்ட காலத்தில் முடிவடையும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது வரையில் 28 % பணிகள் நிறைவு பெற்றுள்ளது. தொடர்ந்து மத்திய அரசுக்கு ரயில் நிலைய மேம்படுத்த வலியுறுத்தியதால், மதுரை ரயில் நிலையம் ரூபாய் 347 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
- Madurai: கிளி ஜோதிடர்களுக்கு மாற்று தொழில் செய்ய அரசு மூலம் கடனுதவி வழங்க கோரிக்கை !
சுரங்கம் மூலம் ரயில் நிலையம் அடைய பயணிகளுக்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.
பணிகள் நிறைவுக்கு பின்னர் மிக அழகான ரயில் நிலையமாக மதுரை ரயில் நிலையம் இருக்கும். நாளொன்றுக்கு 1 லட்சம் பயணிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவான வசதிகள் கொண்டதாக இருக்கும். அந்த வகையில், ரயில் நிலையத்தில் நான்கு மடங்கு விரிவாக்கம் கொண்ட குளிர்சாதன வசதி கொண்ட பயணிகள் ஓய்வு அறை, 30 சதவீதம் குளிர்சாதன வசதி இல்லாத பயணிகள் ஓய்வு அறை, முன்பதிவில்லா பெட்டிகள் குறைக்க கூடாது, ஏற்கனவே இருந்த அளவை விட எட்டு மடங்கு பெரிய இரு சக்கர வாகனம் பாதுகாப்பு மையம், 34 மின் தூக்கிகள் புதிதக கட்டப்பட்டு வரும் ரயில் நிலையத்தில் இடம் பெற உள்ளது. வரும் அக்டோபர் மாதம் முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பாட்டு வரவுள்ளது. மதுரை பெரியார் நிலையத்தில் இருந்து சுரங்கம் மூலம் ரயில் நிலையம் அடைய பயணிகளுக்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.
ரயில்வேக்கு சொந்தமான நிலத்தை ஒரு சென்ட் கூட தனியாருக்கு கொடுக்கக் கூடாது
கூடல் நகர் ரயில் நிலையத்தை இரண்டாவது முனையமாக உருவாக்க வேண்டும், அதற்கு தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து அதனை நடத்த வேண்டும். எங்களின் கொள்கைகளை உறுதியுடன் தொடர்வோம், கடந்த ஆண்டுகளில் மத்திய அரசுக்கு நன்றிகள் தெரிவித்தது நான் தான். தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் தான் மத்திய அரசு பல திட்டங்களை வழங்கி வருகின்றனர். ரயில்வேக்கு சொந்தமான நிலத்தை ஒரு சென்ட் கூட தனியாருக்கு கொடுக்க கூடாது என்று தெரிவித்தார். தென் மாவட்ட மக்கள் அதிகளவு வந்து செல்லும் மதுரை ரயில் நிலையம் மேம்பாடு அடைவது மதுரை மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Encounter Death: இந்தியா முழுவதும் 7 ஆண்டுகளில் இத்தனை என்கவுன்டர்களா? மாநில வாரியாக லிஸ்ட் இதோ!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - “நெல்லுக்கு இதுதான் விலையா? - எங்கே செல்கிறது விவசாயம் ?” இனி சோறு கிடைக்குமா..?