தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி மற்றும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் ஆதாரமாகவும் 3000க்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்களின் பாசனத்திற்கும் சோத்துப்பாறை அணையில் தேக்கி வைக்கப்படும் நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சோத்துப்பாறை அணை கடந்த மாதம் 16ஆம் தேதி அதன் முழு கொள்ளளவை எட்டியது.
எனவே அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வழிந்தோடிய நிலையில், அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அணை அதன் முழு கொள்ளளவான 126.28 அடி நீர் நிறைந்து கடந்த 60 நாட்களாக அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தற்பொழுது சோத்துப்பாறை அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீர் தேக்கப்பட்டுள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்து 127.23 கன அடியாகவும், அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் 127.23 கன அடியாகவும் உள்ளது. அணையில் நீர் இருப்பு 100 மில்லியன் கன அடியாக உள்ளது. மேலும் அதே போல் மஞ்சளார் அணை தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, வத்தலக்குண்டு,
Headlines: நடந்தது, இன்று நடக்கவிருக்கும் விஷயங்கள் என்னென்ன? தலைப்பு செய்திகள் இதோ
உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் ஆதாரமாகவும், தேனி - திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 5000க்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்களின் பாசனத்திற்கும் நீர் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மஞ்சளாறு அணை அதன் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியை கடந்த அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி எட்டியது. இதனை தொடர்ந்து தேனி - திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் 60 நாட்களாக 55 அடியில் முழு கொள்ளளவு உடன் இருந்து வருகிறது.தற்பொழுது அணையின் முழு கொள்ளளவான 57 அடியில் 56 அடி நீர் நிறைந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 138 கன அடி ஆக உள்ள நிலையில், அணையில் இருந்து நீர் வெளியேற்றும் 138 கன அடியாக உள்ளது. இந்நிலையில் அணையில் நீர் இருப்பு 455.90 மில்லியன் கன அடியாக உள்ளது.