தமிழ்நாடு:



  • இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்க நடவடிக்கை தேவை - வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

  • வெள்ள பாதிப்பு நிவாரணத் தொகை வழங்கும் பணிகள் 10 நாட்களில் நிறைவுபெரும், 16 அம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

  • பச்சிளம் குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் கொடுத்த விவகாரம், தமிழ்நாடு வரலாற்றில் மிகப்பெரும் கரும்புள்ளி என அண்ணாமலை விமர்சனம்

  • எண்ணூரில் கடலில் கலக்கும் கச்சா எண்ணெய் 20 சதுர கி.மீக்கு பரவியது, கிழக்கு கடற்கரை பகுதிகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதால் அச்சம்

  • ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை வளையத்திற்குள் இருந்தவர் வெட்டிக்கொலை, கண்காணிப்பு கேமிரா மூலம்ம் காவல்துறை விசாரணை

  • தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய  மாலத்தீவு  பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது, இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

  • கோவை நகைக்கடையில் கொள்ளையடித்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி விஜய் கைது

  • புயல் பாதிப்புகளை பார்வையிட சென்னை வந்த மத்திய குழு, இன்றும் நாளையும் 2 குழுக்களாக பிரிந்து ஆய்வு


இந்தியா: 



  • ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது செல்லும் உச்சநீதிம்னறம் தீர்ப்பு, மாநிலத்தில் செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு

  • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நமக்கு சொந்தமானது அதனை யாரும் உரிமை கொண்டாட முடியாது - நாடாளுமன்றத்தில் அமித்ஷா உறுதி

  • ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பெரியாரை மேற்கோள் காட்டி பேசிய திமுக உறுப்பினர், மாநிலங்களவையில் பெரும் சலசலப்பு

  • மத்திய பிரதேச முதலமைச்சராக மோகன் யாதவ் தேர்வு, சபாநாயகராக முன்னாள் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் டோமர்

  • முதலமைச்சர் பதவி கிடைக்கும் என கணவில் கூட நினைக்கவில்லை ம.பி முதலமைச்சர் மோகன் யாதவ், கடின உழைப்பால் உயர்ந்தவர் என முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் பேச்சு 

  • இனி உலகில் தயாரிக்கப்படும் 5 ஜி 17 வது வெர்ஷன் மொபைலுக்கான விற்பனை தொகையில் ஒரு பகுதி இந்தியாவுக்கு கிடைக்கும் ஐஐடி இயக்குனர் காமகோடி தகவல்


உலகம்: 



  • ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து - ஒரு தலை பட்சமான தீர்ப்பு என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சாடல்

  • காசா முணை கட்டமைக்கு ரூ. 40,859 கோடி மதிப்பிலான திட்டம்: இஸ்ரேல் ஒப்புதல் 

  • தீவிரமடையும் இஸ்ரேல் ஹமாஸ் போர், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியது

  • அர்ஜெண்டினாவின் புதிய முதலமைச்சராக ஜேவியர் மிலே பதிவு ஏற்பு - பொருளாதார நெருக்கடியை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி


விளையாட்டு: 



  • சஞ்சய் சிங், பிரிஜ் பூஷனுக்கு நெருக்கமானவர்; அவர் போட்டியில் இருந்து விலக வேண்டும், என  பஜ்ரங் பூனியா பேட்டி 

  • 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா இன்று மோதல் - வெற்றி யாருக்கு 

  • ஐசிசியின் கொண்டு வந்த புதிய விதிமுறைகள் இன்று நடைபெறும் போட்டியில் சோதனை முயற்சி அமல் செய்யப்படும் என தகவல்

  • புரோ கபடி லீக்: உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது பெங்களூரு புல்ஸ் சாதனை