தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில் திருநள்ளாறுக்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற சனி வழிபாடு மற்றும் தோஷ நிவர்த்தி ஸ்தலமாக இந்த சனீஸ்வர பகவான் கோயில் விளங்குகிறது.
இங்கு ஆண்டுதோறும் ஆடி திருவிழா கொண்டாடப்படும். ஆடி மாதங்களில் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் வழிபாடு சிறப்பாக நடைபெறும். இதற்காக தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சனிபகவானை தரிசித்து சனி பகவானின் அருள் பெற்று செல்வது வழக்கம்.
Arumbakkam Bank Robbery : அரும்பாக்கம் வங்கி கொள்ளை : 4 பேர் கைதான நிலையில் மேலும் ஒருவர் கைது..
புகழ்பெற்ற சனி தோஷ நிவாரண ஸ்தலமான இக்கோவிலின் முன் பகுதியில் அமைந்துள்ள சுரபி நதியில் நீராடி, எள் தீபமிட்டு சனீஸ்வர பகவானுக்கு விளக்கேற்றி சனியின் வாகனமான காக்கைக்கு சிறப்பு பூஜைகள் செய்து மண்ணால் செய்யப்பட்ட காக்கை வாகனத்தை தலையை சுற்றி உடைத்து சனி நிவர்த்தி பெறுவது இக்கோவிலின் சிறப்பு.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடி திருவிழா, கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி ஒவ்வொரு சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் முக்கிய நிகழ்ச்சியான கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சோனைமுத்து கருப்பண்ண சாமிக்கு மதுபான படையல் நேற்று நடந்தது. இதையொட்டி கருப்பணன் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.
இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களை சாமிக்கு படையலிட்டனர். இதைத்தொடர்ந்து 25 கிடா மற்றும் 45 சேவல்கள் சாமிக்கு பலியிடப்பட்டது. பின்னர் அவை சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த விழாவில் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்