தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலக வளாகத்தில் பிரதி மாதம் இரண்டு மற்றும் நான்காம் வெள்ளிக் கிழமைகளில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. இவ்வேலை வாய்ப்பு முகாமானது 08.07.2022 வெள்ளிக்கிழமையன்று தேனி மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் மற்றும் தொழில் நெறி காட்டும் மைய அலுவலகத்தில் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. 


மேலும் படிக்க: Abpnadu Explainer : சம்பளம்.. பி.எஃப் தொகை.. புதிய தொழிலாளர் சட்டங்கள்: சாதகமா? பாதகமா?




இந்நிறுவனங்களில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணி இடங்களுக்கு 10ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ள வகுப்புகள் படித்தவர்கள் மற்றும் 12ம் வகுப்பு, ஐடிஐ, பட்டயபடிப்பு, இளநிலை, முதுநிலை பட்டபடிப்புகள், பொறியியல் பட்டபடிப்புகள் மற்றும் தையற்பயிற்சி முடித்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு கல்வித் தகுதியில் உள்ள வேலை தேடுபவர்கள் கலந்து கொண்டு தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெறலாம். 


மேலும் படிக்க: சென்னைவாசிகளே உஷார்! இன்றிலிருந்து மாஸ்க் போட்டுட்டு போங்க... ரூ.500 அபராதம் போடுறாங்க...!




மேலும் படிக்க: Chennai: கார்த்தி, விஷாலுக்கு கொலை மிரட்டல் - வாட்ஸ் அப்பால் வசமாக சிக்கிய துணை நடிகர்?


அதே சமயம், வேலை தேடுநர்கள் தங்களது சுயவிபர நகல், கல்விச்சான்றிதழ் நகல்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் மற்றும் தொழில் நெறிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் 08.07.2022 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறவிருக்கும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு இவ்வாய்ப்பினை தேனி மாவட்ட வேலை நாடுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் மேலும் விபரங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலக தொலைபேசி எண் 04546-254510 அல்லது 6379268661 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் தெரிவித்துள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண