முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்க அணையை ஒட்டி உள்ள பேபி அணையை பலப்படுத்துவதற்கு இடையூறாக இருக்கும் 13 மரங்களை வெட்ட அனுமதி பெற்று தரக்கோரி தேக்கடி பகுதியில் வந்த மத்திய வனம் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவிடம் தமிழக விவசாயிகள் மனு அளித்தனர்.


Gokulashtami: ‛கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா...’ தமிழின் டாப் 15 கிருஷ்ண ஜெயந்தி பாடல்கள்!




தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக இரு போகம் நெல் விவசாயம் செய்யக்கூடிய ஒரே மாவட்டம் தேனி மாவட்டம். தமிழக , கேரள எல்லையை இணைக்கும் ஒரு முக்கிய மாவட்டமாக பார்க்கப்படுவதும் தேனி மாவட்டம். தேனி மாவட்டத்தின் பிரதான தொழிலாக விளங்குகிறது விவசாயம். இப்பகுதியில் நெல், தென்னை, திராட்சை, வாழை உள்ளிட்ட பயிர்களின் விவசாயம் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது.




மேலும் காய்கறிகளின் உற்பத்தியும் அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியின் விவசாயத்திற்கு உயிர்நாடியாக விளங்குகிறது முல்லைப் பெரியாறு அணை.  கம்பம் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து பழனிசெட்டிபட்டிவரையில் சுமார் 14,707 ஏக்கர் பரப்பளவில் வருடத்திற்கு இரண்டு போகம் நெல் விவசாயம் செய்து வருவது வழக்கம். 


CBI Raid : டெல்லி துணை முதல்வர் வீட்டில் சி.பி.ஐ. ரெய்டு! பரபரப்பில் தலைநகர் அரசியல்களம்!


முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தவும் பேபி அணையை பலப்படுத்திய பின்பு 152 அடியாக தேக்கி கொள்ளலாம் என 2014 இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தொடர்ந்து ஆனால் பேபி அணையை பலப்படுத்துவதற்கு கேரள வனத்துறை இடையூறாக இருந்து வருகிறது. பலப்படுத்துவதற்கு இடையூறாகவும் உள்ள 13 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்குவதில் மத்திய வன அமைச்சகமும் காலம் தாழ்த்தி வருகிறது.


மஞ்ச காட்டு மைனா ஸ்ருதிகா அர்ஜுனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!


தேக்கடியில் சர்வதேச யானைகள் தின விழா துவக்கி வைக்க வந்த மத்திய வனம் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவிடம் தேனி மாவட்டத்தை சேர்ந்த பாரதிய கிசான் சங்க நிர்வாகிகளும், முல்லை சாரல் விவசாய சங்க  நிர்வாகிகள், விவசாய சங்கத்தினர் மனு அளித்தனர். அந்த மனுவில் உடனடியாக 13 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி பெற்று தரவும் அணைப்பகுதிக்கு தளவாடப் பொருட்களை கொண்டு வருவதற்கு வல்ல கடவு வனப்பாதையை சீரமைக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வேண்டி மனுவை அளித்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண