தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி ஜெயந்தி நகரை சேர்ந்தவர் முனியாண்டி (59). இவரது மனைவி சந்தான லட்சுமி. இவர்களுக்கு சொந்தமான 83 சென்ட் நிலம் கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி கிராமத்தில் உள்ளது. இந்த நிலையில் முனியாண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், கடந்த 2010 ஆம் ஆண்டு அந்த நிலத்தை முனியாண்டி மற்றும் சந்தான லட்சுமி அவர்களது மகளின் திருமண செலவுக்காகவும் குடும்ப செலவுக்காகவும் விற்பனை செய்ய முயன்றுள்ளனர்.
CBSE Class 12 results: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு...எப்படி தெரிந்து கொள்வது?
அப்போது அந்த நிலத்தை தானே வாங்கிக் கொள்வதாக கூறி 40 லட்சம் ரூபாய்க்கு ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா கிரையம் பேசினார். மேலும் அவர் அந்த நிலத்தை அவரது பினாமியான கிருஷ்ணன் என்பவரின் பெயரில் பவர் எழுதி தர சொல்லியதால் மனைவி சந்தான லட்சுமி கிருஷ்ணனின் பெயருக்கு பவர் எழுதிக் கொடுத்ததாகவும் பின்னர் ஓ.ராஜாவிடம் பணம் கேட்டபோது அவர் பணம் தராமல் இழுத்தடித்ததாகவும் அந்த புகாரில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.
Rekha Nair: என்ன பத்தி பேசுவியா? செருப்பு பிஞ்சிரும்.. பயில்வான் ரங்கநாதனை புரட்டி எடுத்த ரேகா
இது குறித்து பலமுறை முனியாண்டி அவரை தொடர்பு கொள்ள முயன்ற போது பணம் தர முடியாது எனக்கூறியதாகவும் அதனை மீறியும் பணம் கேட்டால் கொலை செய்து புதைத்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் தங்களிடம் பவர் எழுதி வாங்கிய கிருஷ்ணன் என்பவர் ஓ.ராஜாவின் மற்றொரு பினாமியான விஜயகுமார் என்பவருக்கு எங்களது நிலத்தை பெயரளவிற்கு விற்பனை செய்தது போல் ஒரு பத்திரத்தை தயார் செய்து வைத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பலமுறை காவல்துறையில் மனு அளித்தும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பலமுறை மனு அளித்தும் இதுவரை ஓ.ராஜா மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், தற்போது ஓ.ராஜா அந்த நிலத்தை வேறொரு நபருக்கு விற்பனை செய்ய முயன்று வருவதாகவும், இதனால் அந்த விற்பனையை தடுத்து அந்த நிலத்தை தங்களுக்கு மீட்டு தர வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ஓ.ராஜா, கிருஷ்ணன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் தங்களை கொலை செய்யும் நோக்கோடு வருவதாக தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களது சொத்தை திரும்ப மீட்டுத் தர வேண்டும் என்றும் முனியாண்டி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்