CBSE Class 12 results: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு...எப்படி தெரிந்து கொள்வது?

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

 

12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி, ஜூன் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வுகள் முடிந்து ஒரு மாதம் மேலான சூழலிலும் முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தது. 

இந்த நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலக் கல்வி வாரியங்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, உயர் கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனால் மத்தியக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ மாணவர்கள் பொதுத் தேர்வு முடிவுகளை அறிய முடியாமலும், கல்லூரியில் சேர முடியாமலும் தவித்து வந்தனர். இச்சூழலில், முடிவுகள் வெளியிடப்பட்டிருப்பது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நிம்மதி அளித்துள்ளது.

இந்தாண்டு, ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 92.71 என அறிவிக்கப்பட்டுள்ளது. cbse.gov.in, results.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 

முதல் பருவம், இரண்டாம் பருவ மதிப்பெண்களின் அடிப்படையில் 12ஆம் வகுப்பு இறுதி மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்படவுள்ளது. உள் மதிப்பீடு மதிப்பெண்கள், திட்டப்பணிகள், நடைமுறைத் தேர்வுகள், பொது தேர்வுக்கு முந்தைய தேர்வு உள்ளிட்ட விவரங்கள் இறுதி மதிப்பெண் சான்றிதழில் இடம்பெறவுள்ளது.

2021-22 ஆண்டுக்கான பொது தேர்வு இரண்டு பருவங்களாக நடத்தப்பட்டது. நவம்பர், டிசம்பர் மாதம் நடைபெற்ற முதல் பருவ தேர்வில், கொள்குறி வகை வினாக்களும் இரண்டாம் பருவ தேர்வில் பகுப்பாய்வு வகை அடிப்படையிலான கேள்விகளும் இடம்பெற்றன.

உயர் கல்வி மாணவர் சேர்க்கை தீவிரமாகத் தொடங்கிய நிலையில், மருத்துவம், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் உள்ளிட்ட முக்கியப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் ஒரே மாதத்தில், ஜூலையில் நடைபெற்று வருகிறது.

 

12ஆம் வகுப்பு முடிவுகளை தெரிந்து கொள்ள: cbse.gov.in, results.cbse.nic.in ஆகிய லிங்கை கிளிக் செய்யவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola