மதுரையில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஜெயபாரத் நிறுவனத்தின் அன்னை பாரத் மற்றும் கிளாட்வே கிரீன் சிட்டி, கிளாட்வே சிட்டி போன்ற நிறுவனங்கள் வரியைப்பு செய்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் நேற்று காலை 7 மணி  முதலே புரோமோட்டர்களின் வீடு அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.






வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு, வரி ஏய்ப்பு நடந்ததாக வந்த தகவலையடுத்து டெல்லி, ஹைதராபாத், கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து வருமானவரித்துறையினர் 35க்கும் மேற்பட்டோர் ஜெயபாரத் கட்டுமான நிறுவன பங்குதாரர்கள் பாலு கொத்தனார் என்பவர் மகன்கள் அழகர், ஜெயகுமார்,முருகன், சரவணன் உள்ளிட்டோர் வீடுகளில் அவனியாபுரம், விரகனுார், கோச்சடை, ஊமச்சிகுளம் திருப்பாலையில் உள்ள அலுவலகங்கள் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை 7 மணி முதலே வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. 



இந்நிலையில் மதுரை அவனியாபுரம் கிளாக்வே சிட்டியில் உள்ள அழகர் மற்றும் முருகன் ஆகியோரது வீடுகளில் சோதனையிட்ட அதிகாரிகள் அளவுக்கு அதிகமான பணம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பணம் எண்ணும் இயந்திரம் வரவழைக்கப்பட்டு என்னும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ஐதராபத்திலிருந்து கணினி மென் பொறியாளர் வரவழைக்கப்பட்டு சோதனை தொடர்கிறது. வருமானவரித்துறையினர் புதிதாக இரண்டு (ஹார்ட் டிஸ்க்) கொண்டுவரப்பட்டு அவற்றில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. நேற்றிரவு தங்க நகை மதிப்பிட்டார் குழுவைக் கொண்டு தங்கத்தின் மதிப்பு கண்டறியும் பணிகள் துவங்கியுள்ளது ஒரே பதிவு எண்கள் கொண்ட 13 கார்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது



 

இந்நிலையில் விடிய விடிய வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியதில் அலுவலகத்தில் இருந்து கட்டு்கட்டாக பணம் மற்றும் நகை கைப்பற்றிய நிலையில் இரவு முழுவதும் பணம் எண்ணும் இயந்திரம் மூலமாக பணத்தை வருமானவரித்துறை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் நகையின் மதிப்புகளையும் எடை பார்த்து அதன் மதிப்பீடுகளை ஆய்வு செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல்வேறு பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். வருமானவரிச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்டமாக பிளாக் பேஸ் சிட்டியில் உள்ள வீட்டில் 27 கோடி பணம் 3 கிலோ தங்கம் வெள்ளி பொருட்கள் இருப்பதாகவும், மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

 

மேலும் செய்திகள் படிக்க - ABP EXCLUSIVE : ஓபிஎஸ் ஏன் ஒதுக்கப்படுகிறார் மனம் திறந்த மாஜி அமைச்சர் ஜி.பாஸ்கரன்..!மேலும் சோதனை ஈடுபட்டுள்ள இடங்களில் பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.