தமிழ்நாடு வனத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, தேனி மாவட்ட வனத்துறை சார்பில் நீர்நிலைகள் அமைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் பறவைகள் கணக்கெடுப்பு பணி கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி நடந்தது. இதன் தொடர்ச்சியாக நில பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நேற்று நடந்தது. மாவட்டத்தில் தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், கூடலூர், மேகமலை, வருசநாடு, போடி உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடந்தன.


Sania Mirza: 'இவை மகிழ்ச்சியின் கண்ணீர்..’ கண்ணீர் மல்க டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார் சானியா மிர்சா..!




காப்புக்காடுகள், கிராமப்புற, நகர்ப்புற பகுதிகள், கல்வி நிறுவன வளாகங்கள் ஆகிய இடங்களில் கணக்கெடுப்பு நடந்தது. மாவட்ட வன அலுவலர் சமர்த்தா உத்தரவின்பேரில், ஒவ்வொரு பகுதிகளுக்கும் கணக்கெடுப்பு பணிக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். வனத்துறையினருடன் இணைந்து தன்னார்வலர்கள், பறவைகள் ஆர்வலர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.


"வட மாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டுவாரா முதல்வர்?" - காட்டமான கேள்வியுடன் அண்ணாமலை..




அதன்படி தேனி வீரப்ப அய்யனார் கோவில் பகுதியில் கவுரவ வனப்பாதுகாவலர் டாக்டர் ராஜ்குமார், வனவர் தீனதயாள் மற்றும் தன்னார்வலர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் ஆண்டிப்பட்டி பகுதியில் வனச்சரகர் அருள்குமார் தலைமையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.


WPL 2023: ’எங்களையும் கொஞ்சம் ஃபோகஸ் பண்ணுங்க கேமராமேன்..’ மைதானத்தில் ரசிகர் கோரிக்கை! ஏன் தெரியுமா?


Minister Udhayanidhi Stalin : ’நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வோம்’ - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை..
கேமராக்கள் மூலம் புகைப்படம் எடுத்தும், தொலைநோக்கி வைத்து பார்த்தும், வெறும் கண்களால் பார்த்தும் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் அரிய வகை பறவைகளான கோல்டன் பிரன்டெட் லீப்பேர்டு, ஒயிட் பிரவுடு புல்புல், ரெட்விஸ்க்ரெட் புல்புல், சன்பேர்டு உள்பட பல்வேறு அரிய வகை பறவை இனங்கள் கண்டறியப்பட்டன. கண்டறியப்பட்ட பறவைகள் குறித்த விவரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பின்னர் அறிக்கையாக வெளியிடப்படும் என்று வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண