தேனி மாவட்டம் மேகமலை பகுதியில் வன உயிரினங்கள் அதிகம் நடமாட்டம் உள்ள வண்ணாத்திபாறை அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் சுருளியாறு மின் நிலையம் உள்ளது. மேகமலையில் ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, அணைகளில் சேரும் தண்ணீரை இரவங்கலாறு அணைக்கு கொண்டு வந்து, அங்கிருந்து 2900 மீட்டர் நீள குழாய் மூலம் தண்ணீரை இறக்கி 141 கனஅடி நீரில் 35 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும். 




2021 செப் 4இல் குழாயில் ஏற்பட்ட சேதத்தால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 2023 ஜனவரியில் ரூ. 10 கோடி செலவில் 220 மீட்டர் நீளத்திற்கு சேதமடைந்த குழாயை சீரமைத்தனர். பைப் லைன் முழுவதும் பெயிண்டிங் செய்யப்பட்டது. மின்நிலையத்திற்குள் இருந்த சிறு பழுதும் நீக்கி 2023 ஜுலை 17 ல் மின் உற்பத்தி துவங்கியது. இரண்டே நாட்களில் மீண்டும் பழுது ஏற்பட்டு மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.  தென்மேற்கு பருவமழையை விட வடகிழக்கு பருவ மழை காலங்களில் தான் மேகமலை அணைகளில் தண்ணீர் பெருகும். அந்த தண்ணீரை பயன்படுத்தி தினமும் சுருளியாறு மின்நிலையத்தில் ஆண்டு முழுவதும் மின் உற்பத்தி நடைபெறும். 


Trichy NIT : ”திருச்சி NIT கல்லூரியில் பாலியல் அத்துமீறல்” போராட்ட களத்தில் குதித்த மாணவர்கள்..! பரபரப்பு!


இந்த நிலையில் சுருளியாறு மின் நிலையத்தில் மின் உற்பத்தி திறனை அதிகரிக்க மின்வாரிய அதிகாரிகள் முதற்கட்ட ஆய்வை துவக்கியுள்ளனர். குறைந்த அளவு தண்ணீரில் அதிக மின்சாரம் எடுக்க முடியும் என்பதால், இந்த ஆய்வை துவக்கியுள்ளதாக தெரிகிறது. மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்று, நிலக்கரி, அணு மின் நிலையம் என பல வழிகளில் மின் உற்பத்தி நடைபெறுகிறது. இதில் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.


Tirupur Subramaniam: “பென்ஸ் கார்ல வராங்க! பிற்படுத்தப்பட்டவங்களா? முட்டாள்தான் ஜாதி கேட்பான்” - திருப்பூர் சுப்பிரமணியன்


சுருளியாறு நீர் மின் நிலையம், லோயர் கேம்ப் மின் நிலையத்தில் 168 மெகாவாட் உற்பத்தி நடைபெறுகிறது. 4 ஜெனரேட்டர்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு ஜெனரேட்டர் மூலம் 35 மெகாவாட் என்பது, 42 மெகாவாட்டாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திறன் அதிகரிக்கப்பட்டது. 140 மெகாவாட்டாக இருந்தது தற்போது 168 மெகாவாட் என திறன் உயர்த்தப்பட்டது. ஆனால் சுருளியாறு மின் நிலையத்தில் கடந்த 1978 ல் இருந்து 35 மெகாவாட் என்ற நிலையில் உள்ளது.


Tirupur Subramaniam: “பென்ஸ் கார்ல வராங்க! பிற்படுத்தப்பட்டவங்களா? முட்டாள்தான் ஜாதி கேட்பான்” - திருப்பூர் சுப்பிரமணியன்


நீர் மின் உற்பத்தியை பொறுத்தவரை, தண்ணீர் வரும் உயரம் முக்கிய காரணியாகும். லோயர்கேம்ப்பில் 35 மெகாவாட் உற்பத்திற்கு 400 கன அடி தண்ணீர் தேவைப்படும். ஆனால் சுருளியாறு நிலையத்தில் 35 மெகாவாட் உற்பத்தி செய்ய 141 கன அடி போதுமானது. காரணம் சுருளியாறு மின் நிலையத்தில் 971 மீட்டர் உயரத்திலிருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. எனவே சுருளியாறு மின் நிலையத்தில் உற்பத்தி திறன் 35 மெகாவாட் என்பதை 42 மெகாவாட்டாக உயர்த்த நீண்ட காலமாக திட்டம் இருந்தது. தற்போது வாரிய அதிகாரிகள் அதற்கான ஆய்வை துவக்கி உள்ளனர்.