காரை கடித்துக் குதறிய நாய்கள் - தேனியில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

காரின் நிலைமை பொதுமக்களுக்கு ஏற்பட்டால் என்ன ஆவது என்றும் இப்பகுதியில் குழந்தைகளும் இருக்கின்றனர் என்று  தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

Continues below advertisement

தேனியில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மருத்துவரின் காரை தெரு நாய்கள் கூட்டம் கடித்துக் குதறி சேதப்படுத்தியது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Continues below advertisement

தேனி மாவட்டம் தேனி நகர் புதிய பேருந்து நிலையம் அருகே கேஆர்ஆர் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். இவர், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய பிரிவு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

Uttarkashi Tunnel Rescue: 17 நாட்கள் இருட்டில் நடந்தது என்ன? - விவரிக்கும் மீட்கப்பட்ட தொழிலாளி விஸ்வஜீத் குமார்


இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடித்து வீடு திரும்பிய அவர், தனது வீட்டு வாசல் முன்பு  காரை நிறுத்தி வைத்திருந்தார். பின் காலை வந்து பார்த்தபோது தனது காரின் முன் பக்கம் பலமாக சேதம் அடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

வானிலை மையத்தின் அறிவிப்புகளை எப்படி புரிந்துகொள்வது..? சொற்களும்...விளக்கமும்..!


பின்னர் தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது அப்பகுதியில் இருந்த சுமார் ஐந்து இருக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் தனது காரை வெறி பிடித்தது போல் கடித்து குதறிய காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். காரின் முன்பக்க பம்பர்களை கடித்துக் குதறிய நாய்கள் காரின் மேல் ஏறி நின்றும் சேதப்படுத்தி அருகில் இருந்த வீடுகளுக்கு சென்று சுற்றி திரிந்தது.

TN Rain: கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை - ஆறு போல் காட்சியளிக்கும் விளை நிலங்கள்


பின்னர் காரினை ஷோரூம்விற்கு எடுத்துச் சென்று பார்த்த போது சுமார் ரூ.50,000 வரை செலவு ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்தார். இப்பகுதியில் நாய்களின் தொல்லை தொடர்ந்து இருந்து வருவதாகவும் இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறினார் . நள்ளிரவு நேரத்தில் அப்பகுதியை கடந்து செல்லும் பொது மக்களுக்கு நாய்கள் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் காரின் நிலைமை பொதுமக்களுக்கு ஏற்பட்டால் என்ன ஆவது என்றும் இப்பகுதியில் குழந்தைகளும் இருக்கின்றனர் என்று  தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola