கம்பத்தில் மைக் செட் உரிமையாளர்களுக்கான பாட்டுப்போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியை ஏராளமான ரசிகர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.


ஒவ்வொரு துறைகளிலும் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தும் வண்ணமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று மைக் செட் உரிமையாளர்கள் தங்களது தனி திறன்களை வெளிக்காட்டும் வண்ணமாக பாட்டு போட்டிகள் நடத்தி வருகின்றனர்.


மைக்ரோசாப்ட் முடக்கம் எதிரொலி.. 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து.. விஸ்வரூபம் எடுக்கும் பிரச்னை




தென் மாவட்டங்களில் ஒவ்வொரு நிகழ்வும் கொண்டாடப்படும். குறிப்பாக கல்யாணம், காது குத்து, திருவிழாக்கள் என எல்லா நிகழ்விலும் சவுண்ட் சர்வீஸ் தங்களது பங்களிப்பை வெளிப்படுத்துவார்கள். துக்க வீடுகளில் கூட பாடலை இசைப்பதில் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்நிலையில், இது போன்ற சவுண்ட் சர்வீஸ் குழுக்களுக்கு போட்டிகள் வைக்கப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது.


Naam Tamilar Katchi : ”தமிழ்நாட்டில் 3வது பெரிய கட்சியாக வளர்ந்துள்ள நாம் தமிழர்” புதிய வரலாறு படைக்கும் சீமான்..!




இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கம்பத்தில் கம்பம் ஏரியா ஒலிபெருக்கி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக இரண்டாம் ஆண்டு பாட்டுப்போட்டி திருவிழா நடத்தப்பட்டது. இதற்காக கம்பம் புதுக்குளம் ஆலமரம் செல்லும்  வழியில் திறந்தவெளியில் மலையடிவாரத்தில் நேற்றும், இன்றும் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் மதுரை, திண்டுக்கல்,தேனி, விருதுநகர் மாவட்டம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 150க்கும் மேற்பட்ட மைக் செட் உரிமையாளர்கள் கலந்து கொண்டு தங்களது ஒலிபெருக்கியின் திறன்களை வெளிப்படுத்தினர்.


Thangalaan Release : வெடிய போடு..பா ரஞ்சித்தின் தங்கலான் வருகிறான்.. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு




இப்போட்டியில் கூம்பு வடிவ குழாய் மைக் செட்  (ஒலிபெருக்கிகள்) வரிசையாக கட்டப்பட்டு அந்த ஒலிபெருக்கிகளில் இருந்து துல்லியமாகவும் தெளிவாகவும் அதிக சத்தத்துடன் கூடிய பாடல் ஒலிக்கின்றதோ அதனை சிறந்த ஒலி பெருக்கியாக தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஒலிபெருக்கி பாட்டுப்போட்டியில் முற்றிலுமாக பழைய பாடல்கள் மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்பட்டுள்ளது.


தொடர்ந்து இந்த இசை போட்டியில் வெற்றி பெறும் ஒலிபெருக்கி உரிமையாளர்களுக்கு ரொக்க தொகை பரிசாக வழங்கப்படுகிறது. இந்த போட்டியினை கம்பம் மற்றும் தேனி மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து இசை ரசிகர்கள் வந்து ஆரவாரம் செய்து போட்டியினை ரசித்துச் சென்றனர்.