கட்டுமான பணிகள் நடக்கின்ற முதல் கட்ட பதிவுகளை 10% பணிகள் முடிந்திருக்கின்றன.


மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை


மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான பொது கலந்தாய்வு கூட்டம் தோப்பூர் எய்ம்ஸ் அலுவலகத்தில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் மதுரை எய்ம்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹனுமந்தாராவ், எய்ம்ஸ் நிர்வாக துணை இயக்குநர் விஜய்குமார் நாயக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் காணொளி காட்சி மூலம் எய்ம்ஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கலந்தாய்வு கூட்டம் 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து எய்ம்ஸ் கட்டிட பணிகள் நடைபெறும் இடத்தை எம்.பி மாணிக்கம் தாகூர் நேரில் பார்வையிட்டார்.


எம்.பி மாணிக்கம் தாகூர் பேட்டி


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து விருதுநகர் எம்.பி கூறியதாவது: மதுரை எய்ம்ஸ்னுடைய, இப்பொழுது ராமநாதபுரத்தில் நடந்து வருகின்ற வகுப்புகளும் மற்றும் அதற்கான ஆசிரியர்கள் மற்றும் துணை ஆசிரியர் பேராசிரியர் நியமன பற்றியும் விவாதிக்கப்பட்டது. மதுரை எய்ம்ஸ்ன் 147 மாணவர்கள்  இப்பொழுது இராமநாதபுரத்தில் படித்து வருகிறார்கள். மதுரை எய்ம்ஸ் கட்டிடம் கட்டுவதற்காக பணியை பற்றிய விவாதம் நடைபெற்றது. மத்திய அரசு எல் அண்ட் டி நிறுவனத்திற்கு கட்டிடப் பணிகளை வழங்கி இருக்கிறது. இந்த கான்ட்ராக்ட்படி 33 மாதங்களிலே 2024 மார்ச்சில் தொடங்கி 33 மாதங்களிலே இரண்டு கட்ட கட்டடங்கள் கட்டி முடிக்கப்படும் திட்டம் போடப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக 18 மாதத்திற்கு உள்ளான கட்டிடங்களும் கட்டி முடிக்கப்படும். 2026 அக்டோபர் இரண்டு கட்டம் கட்டி முடிக்கப்படும் என்பதற்கான அறிக்கையை தந்தார்கள். 


10% பணிகள் முடிந்திருக்கின்றன


தமிழக அரசின் அனைத்து வகையான ஒத்துழைப்பு அனைத்தும் வழங்கப்பட்டு அதற்கான தமிழக அரசினுடைய மாவட்ட நிர்வாகத்தினுடைய முழு ஒத்துழைப்போடு நடைபெறுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நம்முடைய நீண்ட நாள் கனவு மதுரை எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படுமா என்ற நம்பிக்கை ஒரு காலத்தில் இருந்தது. இப்போது கட்டி முடிக்கப்படுவதற்கான திட்டம் கண் முன்னாலே தெரிகிறது. அதுபோலவே அதற்கான கட்டுமான பணிகள் நடக்கின்ற முதல் கட்ட பணிகளின் 10% பணிகள் முடிந்திருக்கின்றன. முதல் 18 மாதங்களுக்கான பணிகளை முடிக்கின்ற அதுவும் குறிப்பாக கல்லூரியினுடைய மருத்துவக் கல்லூரி வருகின்ற கட்டடம் அதுபோல மாணவர்கள் தங்கக்கூடிய விடுதி மற்றும் எய்ம்ஸ்ன் முக்கிய கட்டிடம் அதாவது மெயின் பில்டிங் போன்ற கட்டிடங்கள் 18 மாதங்களில் வரையறுக்கின்றன. இன்னும் ஒரு மூன்று மாதத்தில் இருந்து ஆறு மாதத்திற்குள் நம்மால் பார்க்கக்கூடிய மாற்றமாக இருக்கும் என்று கூட்டத்திலே தெரிவிக்கப்பட்டது. 18 மாதங்களிலே நமக்கு கண்ணுக்கு முன்னாலே தெரிகின்ற கட்டிடமாக மாறும். 


18 மாதங்களுக்குள்


ராமநாதபுரத்தில் படித்து வரும் மதுரை எய்ம்ஸ் மாணவர்களை தற்காலிமாக மதுரைக்கு இடமாற்றம் செய்யும் திட்டம் கைவிடப்பட்டிருக்கிறது. அதனால் இப்பொழுது ராமநாதபுரத்திலே அதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டது. ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் 5-வது தளத்தில் வகுப்புகள் நடைபெறுகின்றன. மதுரை ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் இரண்டு தளங்களிலே மாணவர்களுக்கான தங்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் இந்த ஆண்டு சேர்க்கப்பட போகின்ற 50 மாணவர்களுக்கு அந்த மருத்துவ குழுவில் இடம் இல்லாததால் மாநில அரசிடம் இன்று கூட்டத்திலே வலியுறுத்தப்பட்டது, மாநில சுகாதார துறையிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் வேறு வகையிலே மாணவர்களுக்கு தங்குகின்ற இடம் ராமநாதபுரத்தில் ஏற்படுத்த முடியுமா என்று கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். கல்லூரி பேராசிரியர்கள் பணி நியமனத்திற்கு கிட்டத்தட்ட 50% பணிகள் நிரப்பப்பட்டு விட்டாலும் இன்னும் 50% மேற்பட்ட பணிகள் நிரப்பப்பட வேண்டி இருக்கிறது. சூப்பிரண்ட் போன்ற முக்கிய பதவிகளுக்கு இன்னும் யாரும் விண்ணப்பிக்கவில்லை. முதல் கட்டமாக 18 மாதங்களுக்குள் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதிகள் கட்டி முடிக்கப்பட்டு ராமநாதபுரத்தில் உள்ள மாணவர்களை தங்க இடமாற்றம் செய்வது தான் திட்டம். இவ்வாறு அவர் கூறினார்.