பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற தலைவர் வார்டில் சாலையில் பொங்கி செல்லும் பாதாள சாக்கடை நீரால் குடியிருப்பு வாசிகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் தவித்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க பலமுறை புகார் அளித்த போதும் பணம் கொடுத்தால் தான் பாதாள சாக்கடை அடைப்புகளை நகராட்சி நிர்வாகம் சரி செய்யும் என தெரிவிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.




தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுமித்ரா சிவக்குமா.ர்  பெரியகுளம் நகர் மன்ற தலைவராக  பதவியில் உள்ளார். இந்த நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்யாத நிலையில் ஆங்காங்கே  பாதாளை சாக்கடை நீர் காலையும், மாலையும்  சாலையில் பொங்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 


காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் முன்னணி நிறுவனங்கள்.. வேலைவாய்ப்பு முகாம் பற்றி தெரியுமா ?




இதில் குறிப்பாக பெரியகுளம் நகர் மன்ற தலைவரின்  4வது வார்டு பகவதி அம்மன் கோவில் செல்லும் சாலையில்  பல நாட்களாக பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்காததால் சாலையில் சாக்கடை கழிவுநீர் பொங்கி வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது.  மேலும் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு சாலையில் செல்பவர்கள் முகம் சுளித்தவாறு அவல நிலையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது.


Walkie Talkies Blast: நேற்று பேஜர், இன்று அடுத்தடுத்து வெடித்த வாக்கி-டாக்கீஸ், 14 பேர் பலி, 300 பேர் காயம் - பதற்றத்தில் லெபனான்




மேலும் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க பலமுறை பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நகர்மன்ற தலைவரின் வார்டிலேயே  இது போன்ற அவல நிலை தொடர்வதாக  அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.


”எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அறிக்கை, வேலுமணிக்கு மவுனமா?” EPS ஆடும் ஆட்டம் என்ன..?


மேலும் பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்வதற்கு அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களிடம் பணம் கேட்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.எனவே பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் பொங்கி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பகுதி மக்களின் கோரிக்கை வைத்துள்ளனர் .




இதுகுறித்து சம்பந்தப்பட்ட நகர்மன்ற தலைவரிடம் கேட்டபோது சாக்கடை கழிவுகளை நகர்மன்ற நிர்வாகத்தின் சார்பில் முறையாக சரி செய்து வருவதாகவும், அப்படி பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்னை இருப்பின் உடனடியாக அதனை சரிசெய்து தருவதாக நகர் மன்ற தலைவர் உறுதியளித்துள்ளார்.