கொலை செய்ய கை செலவிற்கு, பொதுமக்களிடம் ஆயுதங்களை காட்டி வழிப்பறி செய்ய திட்டமிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து 7 பேரையும் கைது செய்த அவனியாபுரம் காவல்துறையினர் அவர்களிடம் இருந்து ஆறு பட்டாகத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.



காவல்துறையினர் கை துப்பாக்கியுடன் ரோந்து பணி


 






தமிழகத்தில் கடந்த சில மாத காலமாக தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் ஏற்பட்டு வருவதாக புகார் சொல்லப்பட்டு  வருகிறது. இந்நிலையில் பல இடங்களில் குற்றவாளிகள் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் நிம்மதி ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, மதுரை மாவட்டத்தில் கொட்டாம்பட்டி, உசிலம்பட்டி, மேலூர், திருமங்கலம், அழகர்கோயில், அலங்காநல்லூர், வாடிப்பட்டி, ஒத்தக்கடை, உசிலம்பட்டி உள்ளிட்ட மாவட்ட பகுதியில் குற்றச் சம்பவங்களை தொடர்ந்து கட்டுப்படுத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் இடங்களில் மாவட்ட காவல்துறையினர் கை துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 


 

கூடுதல் பாதுகாப்பு வேண்டும் அப்போது தான் மக்கள் அச்சம் நீங்கும்

 

இதே போல் மதுரை மாநகர் பகுதியிலும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை அவனியாபுரம் காவல் நிலையம் எல்கைக்கு  உட்பட்ட பகுதியில், கொலை செய்ய பண செலவிற்காக பட்டாகத்திகளுடன் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 7 பேர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மறைத்து வைத்திருந்த 6 பட்டா கத்திகள் மற்றும் வாள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

தன்னை கொலை செய்ய முயற்சிப்பவர்களை முன்கூட்டியே கொலை செய்ய முடிவு








மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகர் சாலையில் அவனியாபுரம் காவல்துறையினர் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போ சந்தேகத்துக்குரிய வகையில் வாளுடன் நின்றுகொண்டிருந்த மதுரை வடக்குமாசி வீதி பகுதியை சேர்ந்த குமார் (எ) பைப்குமார் என்பவரை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது பைப்குமாருக்கும் வைக்கம் பெரியார் நகரில் உள்ள மச்சசிவா தரப்புக்கும் முன் பகை இருப்பதாக தெரியவந்தது. இந்த சூழலில் மச்சசிவா தனது கூட்டாளிகளான ரஞ்சித், முத்துப்பாண்டி  மூலம் தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாகவும், அதனால் அவர்கள் இருவரையும்  கொலை செய்ய யோசித்து முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.


பொதுமக்களிடம் ஆயுதங்களை காட்டி வழிப்பறி செய்ய திட்டமிட்டதாக கூறியுள்ளார்


மேலும் கொலை செய்ய கை செலவை சரி செய்வதற்காக அவனியாபுரம் வைக்கம் பெரியார்நகர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (24), அருண்குமார் (24), ஆரோக்கிய விஜய் (20), ஆகாஷ் (19), அசோக்குமார் (23), முகம்மது அசன் (24) ஆகியோருடன் சேர்ந்து பொதுமக்களிடம் ஆயுதங்களை காட்டி வழிப்பறி செய்ய திட்டமிட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து 7 பேரையும் கைது செய்த அவனியாபுரம் காவல்துறையினர் அவர்களிடம் இருந்து ஆறு பட்டாகத்தி , வாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Chandrababu Tirupati: பக்தர்கள் அதிர்ச்சி..! திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு - முதலமைச்சர் சந்திரபாபு


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Lokesh Kanagaraj : இரண்டு மாத உழைப்பு போச்சு...கூலி பட காட்சிகள் கசிந்தது குறித்து லோகேஷ் கனகராஜ்