- திருவள்ளூர் அருகே கவரப்பேட்டையில் நடைபெற்ற ரயில் விபத்தில் தடம்புரண்ட பெட்டிகளை மீட்கும் பணி தீவிரம் – மழை காரணமாக மீட்பு பணியில் பாதிப்பு
- ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் மீட்கப்பட்டு பீகாருக்குச் சென்ற சிறப்பு ரயிலில் பத்திரமாக அனுப்பி வைப்பு
- கவரப்பேட்டை அருகே ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக 18 ரயில்கள் ரத்து – சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்
- கவரப்பேட்டை ரயில் விபத்தில் காயம் அடைந்த 19 பேருக்கும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கான உரிய மருத்துவ சிகிச்சையை வழங்க முதலமைச்சர் உத்தரவு
- அரியலூரில் தந்தை பெயரில் உள்ள சொத்தை மகன் பெயருக்கு மாற்ற லஞ்சம் கேட்டதாக புகார் – 2 லட்சம் கேட்டதாக சார்பதிவாளர் மீது விவசாயி குற்றம் சாட்டிய வீடியோ வைரல்
- ஓசூர் கோட்டத்தில் வன விலங்குகளுக்கு நீர் கிடைக்க நீர்நிலைகளை தூர்வாரும் பணி – 1 கோடி நிதி ஒதுக்கீடு
- தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில், சென்னையில் இன்று காலை முதலே பல இடங்களில் பரவலாக மழை
- கவரப்பேட்டை ரயில் விபத்துக்கு காரணம் என்ன? உயர்மட்ட விசாரணை குழு அமைத்தது தெற்கு ரயில்வே
- தமிழ்நாட்டில் அரசு காப்பகங்களில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க சிறப்பு நிதி ஒதுக்கீடு
- சேலத்தில் பண்டிகை நாள் காரணமாக நேற்று ஒரே நாளில் ரூபாய் 1.65 கோடிக்கு காய்கறிகள் விற்பனை – வியாபாரிகள் மகிழ்ச்சி
- ஓசூரில் சாலையோரம் நின்ற புல்லட்டை திருடிச் சென்ற திருடன் அரசுப்பேருந்தில் மோதி உயிரிழப்பு
- ஆலந்தூர் சுரங்கப்பாதை அருகே லாரி மோதி பெண் என்ஜினியர் உயிரிழப்பு
- தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- புதுச்சேரியில் சிபிஐ அதிகாரி போல பேசி 13.65 லட்சம் ரூபாய் மோசடி – புதுச்சேரி போலீசார் தீவிர விசாரணை
Tamilnadu Round Up: கவரப்பேட்டையில் மீட்பு பணி! சென்ட்ரலில் அலைமோதும் பயணிகள் கூட்டம் - தமிழகத்தில் இதுவரை!
சுகுமாறன்
Updated at:
12 Oct 2024 10:18 AM (IST)
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு செய்திகள்
NEXT
PREV
Published at:
12 Oct 2024 10:18 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -