தேனி மாவட்டம் கோம்பை அருள்மிகு திருமலைராயப்பெருமாள் திருக்கோயில் வைகாசி விசாக திருத்தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. முதல் நாள் நிகழ்வாக சுவாமி ரதம் ஏறுதல் அடிபெயர்த்தல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


தேனி மாவட்டம் கோம்பை மலையடி வார பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு திருமலை ராயப்பெருமாள் திருக்கோயில். இத்திருக்கோயில் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயிலில் சுயம்பு வடிவில் உருவமாய் பெருமாள் அவதரித்துள்ளார். மேலும், சைவக்கோலத்தில் காட்சியளிக்கும் பெருமாளுக்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவிழா மிக விமர்சையாக நடைபெறும்.




Crime: கேஸ் சிலிண்டரில் கசிவு.. தூங்கிக்கொண்டிருந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு


இந்த புரட்டாசி மாதத்தில் ஐந்து வாரங்களில் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் பூஜைகள் உள்ளிட்டவை நடத்தப்படுகிறது. மேலும் நவராத்திரி மார்கழி மாத பூஜைகளும் இங்கு விமர்சையாக நடைபெறுகிறது. மேலும் இக்கோயிலில் திருத்தேரோட்டம் வைகாசி மாதத்தில் விமரிசையாக நடைபெறும். முன்னதாக 2003 ஆம் வருடம் நடைபெற்றது. பின்னர் கடந்த 20 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு வைகாசி விசாக திருத்தேரோட்டம்  நேற்று தொடங்கி இன்றும், நாளையும் (22,23,24)  மூன்று நாட்கள்  நடைபெறுகிறது.


Madurai: வைகை ஆற்றில் குளிக்க சென்ற 4-ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!




கடந்த 13 ஆம் தேதி இந்த தேரோட்டத்திற்கான கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் தேரோட்டத்தின் முதல் நாள் நிகழ்வாக  சுவாமி ரதம் ஏறும் நிகழ்ச்சி மற்றும் திருத்தேர் அடிப்பெயர்த்தல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. கோயிலில் இருந்து பூதேவி, ஸ்ரீதேவி சமேத திருமலை ராயப்பெருமாள் மேளதாளங்களுடன் ஊர்வலமாக தேருக்கு அழைத்து வரப்பட்டார்.


Latest Gold Silver Rate: தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான் மக்களே..! சவரனுக்கு ரூ.880 குறைந்தது..




அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காண்பித்து திருத்தேரில் பெருமாள் பக்தர்களுக்கு எழுந்தருளி காட்சியளித்தார். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க திருத்தேரை வடம் பிடித்து அடிப்பெயர்த்தல் நிகழ்வில் கலந்து கொண்டனர். முதல் நாள் நிகழ்வாக நடைபெற்ற இந்த அடிப்பெயர்த்தல் நிகழ்ச்சியில் தேர் வடம் பிடித்து ஒரு அடி நகட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதியம் மற்றும் நாளை மதியம் ஆகிய நேரங்களில் தேர் ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக வர உள்ளது.  இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்து செல்கின்றனர்.