மலை கிராமச் சாலையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மற்றும் மண் குவியல்களை மூன்று ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தி சாலையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் தற்காலிக பணிகள் முடிவடைந்து போக்குவரத்து சீர் செய்யப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தெரிவித்தனர்.
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது அகமலை ஊராட்சி. இந்த ஊராட்சி போடிநாயக்கனூர் தாலுகாவிற்கு உட்பட்டது என்றாலும் சாலை வசதி என்பது பெரியகுளம் சோத்துப்பாறை அணை வழியாகவே உள்ளது.
இந்த ஊராட்சியில் கண்ணகரை, அலங்காரம், பட்டூர், பரப்பம்பூர், அண்ணா நகர், கரும்பாறை, குறவன் குழி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது. இந்த மலை கிராமங்களுக்கு செல்லும் சாலையில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் கனமழையால் 15 க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாலை இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலைக்கு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் செல்லும் மலை கிராம பள்ளி மாணவ, மாணவிகள் சாலையில் தேங்கியுள்ள மண் மற்றும் சகதிகளை கடந்தும், சாலையில் சரிந்துள்ள புதர்கள் மற்றும் மரங்களைக் கடந்து 6 மணி நேரம் நடந்து சென்று பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
TN Rain Alert: 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை - எங்கெங்கு? வானிலை அறிக்கை விவரம் இதோ..!
மேலும் மலை கிராம மக்களின் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்குவதற்கும், விவசாய விளை பொருட்களை விற்பனைக்காக தலையில் சுமந்தபடி சென்றனர்.சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் அகைமலை ஊராட்சியில் உள்ள மலை கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சேதம் அடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.