தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல், வாழை, தென்னை உள்ளிட்ட விவசாயத்திற்கு அடுத்தபடியாக கருப்பு பன்னீர் திராட்சை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கருப்பு பன்னீர் திராட்சை விளைவதற்கு ஏற்ற மண்வளம், மிதமான தட்பவெப்ப நிலை நிலவும். இதனால் இங்கு ஆண்டுதோறும் பன்னீர் திராட்சை விளைச்சலாகும்.

Continues below advertisement

Digital House Scheme: சட்டப்பேரவையில் டிஜிட்டல் ஹவுஸ் திட்டம் அறிமுகம்; என்ன சிறப்பம்சங்கள்?

Continues below advertisement

இந்த கருப்பு பன்னீர் திராட்சையில் மருத்துவ குணம் இருப்பதால் அண்டை மாநிலமான கேரளாவில் இதற்கு தனி விற்பனை  உண்டு. ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள மராட்டிய மாநிலத்தில் நவம்பர் மற்றும் ஏப்ரல் மாதம் மட்டுமே திராட்சை கிடைக்கும். அங்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் அறுவடை நடைபெறும்.

Bathinda Military Station: பஞ்சாபில் மீண்டும் பதற்றம்...ராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு...4 பேர் உயிரிழப்பு..!

ஆனால் கம்பம் பள்ளத்தாக்கில் ஆண்டுக்கு 3 முறை அறுவடை செய்யப்படுகிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயண தேவன்பட்டி, உத்தமபாளையம், ராயப்பன்பட்டி ஆனைமலையன்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10,000 ஏக்கர் நிலப்பரப்பில் கருப்பு பன்னீர் திராட்சை விவசாயம் செய்யப்படுகிறது.

தற்போது அந்த பகுதியில் கருப்பு பன்னீர் திராட்சை  நல்ல நிலையில் விளைச்சல் உள்ளது. விவசாயிகள் பன்னீர் திராட்சைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தமிழக அரசின் பரிந்துரையின்பேரில் மத்திய அரசு கருப்பு பன்னீர் திராட்சைக்கு புவிசார் குறியீடு வழங்கி மத்திய அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு...கவுன்சிலருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை...திமுக தலைமை கழகம் அதிரடி..!

திராட்சைக்கு புவிசார் குறியீடு கிடைத்ததற்கு திராட்சை விவசாயிகள் கூறும்போது, “கருப்பு பன்னீர் திராட்சைக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது பெரிய அங்கீகாரமாக கருதுகிறோம். இதனால் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. திராட்சை பழத்திற்கு இனி நல்ல விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. பன்னீர் திராட்சைக்கு புவிசார் குறியீடு வழங்கியதன் மூலம் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது ஒரு டிரேட் மார்க் போன்றது இனி மார்க்கெட்டிங் செய்வது எளிதாக இருக்கும். நல்ல விலை கிடைக்கும்” என்றனர்.


மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண