தமிழக சட்டப்பேரவையில் காகிதமில்லா சட்டப்பேரவை என்னும் அம்சம் ஏற்கெனவே அமலில் உள்ள நிலையில்,  இன்று முதல் டிஜிட்டல் ஹவுஸ் என்னும் புதிய திட்டம் நடைமுறை செய்யப்பட்டுள்ளது. அதன்படி உறுப்பினர்களின் மேசை மேல் உள்ள கணினியில் மின்னணுப் புத்தகம் என்ற செயலி நிறுவப்பட்டுள்ளது. 


இதன்மூலம் கேள்வி கேட்பவர், பதில் சொல்பவர், அவர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை இனி மின்னணு முறையிலேயே காணலாம். இந்த அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு வெளியிட்டுள்ளார்.


மின்னணு வடிவத்துக்கு மாறும் சட்டப்பேரவை


கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி ஆண்டாட்டு காலமாக புத்தக வடிவில் கையில் தரப்படும் பட்ஜெட்டாக அல்லாமல், காகிதம் இல்லாமல் இருக்கிறது. மின்னணு வடிவில் உள்ள இதைக் காண சட்டப்பேரவை உறுப்பினர்களின் இருக்கைக்கு முன்பாக உள்ள மேசையில் கையடக்க கணினி வைக்கப்பட்டுள்ளது.


இதைப் பின்பற்றி அண்மையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இ- பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இத்தகைய முன்னெடுப்புகளால், பேரவையில் காகிதச் செலவு மிச்சமாகி வருகிறது. 


இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல் டிஜிட்டல் ஹவுஸ் என்னும் புதிய திட்டம் நடைமுறை செய்யப்பட்டுள்ளது. அதன்படி உறுப்பினர்களின் மேசை மேல் உள்ள கணினியில் இ - புக் என்ற செயலி நிறுவப்பட்டுள்ளது. 


இதன் மூலம் கேள்வி கேட்கும் உறுப்பினர்கள், பதில் சொல்லும் உறுப்பினர்கள், அவர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை இனி மின்னணு முறையிலேயே காணலாம்.