ஒன்றிய குழு உறுப்பினர்கள் புகார்:


கடமலை  மயிலாடும்பாறைஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் இடையூறு செய்யும் திமுக ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒன்றிய குழுதலைவர் உள்பட 11 பேர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்து இதுதொடர்பாக தேனி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.


நாளை மும்பை செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.. ராகுல் காந்தி யாத்திரையில் பங்கேற்பு




ஒன்றிய செயலாளர் இடையூறு திமுக :


தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலை- மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் இடையூறு செய்யும் திமுக ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒன்றிய குழு தலைவர் சித்ரா சுரேஷ், ஒன்றிய குழு துணை தலைவர் சேகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் 9 பேர் உட்பட ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யப் போவதாக தேனி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.


Nadhiya: "கிஸ் பண்ணிடுவேன்" நதியாவை மிரட்டிய பிரபல மலையாள நடிகர் - எதற்கு தெரியுமா?




ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் சில நபர்களை வைத்துக்கொண்டு கடமலை- மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் தலையிட்டு அரசு அலுவலர்களை மிரட்டி இடையூறு செய்து வருவதாக குற்றச் சாட்டு தெரிவிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வருசநாடு, பஞ்சந்தாங்கி கண்மாய் வேலையை  ஒன்றிய செயலாளருக்கு வேண்டிய நபர்கள் மூலம் கண்மாய் வேலையை தடுத்து நிறுத்துவதற்கு நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளார்.


ADMK: அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம் யாருக்கு? யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?




ராஜினாமா அறிவிப்பு :


இதனால் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களின் வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெறுவது தடைப்பட்டுள்ளது. திமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, ஊராட்சி ஒன்றிய அலுவலர்களை மிரட்டி, என்னை கேட்காமல் டெண்டர் விடக்கூடாது. அப்படி டெண்டர் விட்டால் அந்த டெண்டர்களை கோர்ட் மூலம் ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பேன் என அதிகாரிகளை மிரட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. இதனால் அலுவலர்கள் மன உளைச்சலில் உள்ளனர். எனவே ஊராட்சி ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், ஊராட்சி துணைத் தலைவர், உட்பட ஒன்றிய கவுன்சிலர்கள் 11 பேர் ராஜினாமா செய்யப் போவதாக இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனாவிடம் மனு அளித்தனர்.