ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
ராகுல் காந்தியின் பாத யாத்திரை நாளை மும்பையில் நிறைவடையும் நிலையில், மாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை மும்பை செல்கிறார்.
இந்த பொதுக்கூட்டத்தில் இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர் தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், நாளை மாலை இண்டியா கூட்டணியின் பொதுக்கூட்டம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழா:
நாளை மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சைத்ய பூமியில் பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை நிறைவு செய்கிறார் ராகுல் காந்தி. நிறைவு விழாவில் காங்கிரஸ் அழைப்பின் பேரில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். அதன்படி, காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மேலும் தமிழ்நாட்டியில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.
எந்தெந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்..?
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியில் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை மகாராஷ்டிராவில் மார்ச் 17ம் தேதியுடன் நிறைவடைகிறது. மும்பையில் இன்று மெகா பேரணி நடைபெறவுள்ள நிலையில் பல முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றன. அவர்கள் யார் யார்..?
இந்த மெகா பேரணியில், உ.பி., முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, என்சிபி தலைவர் சரத் பவார், பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், ஜார்கண்ட் முதலமைச்சர் சாம்பாய் சோரன், முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா ஆகியோர் கலந்து கொண்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சோரன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தீபங்கர் பட்டாச்சார்யா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
யார் பங்கேற்கவில்லை..?
இந்த மாபெரும் பேரணியில் பங்கேற்க மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் கலந்துகொள்வாரா என்பது இதுவரை தெரியவில்லை. இதுதவிர இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் டி.ராஜாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து பதில் இன்னும் வரவில்லை. இதற்கு காரணம் ராகுல் காந்தியை எதிர்த்து டி. ராஜாவின் மனைவி அன்னி ராஜா வயநாட்டில் போட்டியிடுகிறார் என்று கூறப்படுகிறது. சிபிஐ (எம்) தலைவர் சீதாராம் யெச்சூரியும் இந்த அழைப்பிற்கு பதிலளிக்கவில்லை. பிடிபி தலைவர் மெகபூபா முப்தியும் பேரணிக்கான அழைப்புக்கு பதிலளிக்கவில்லை.
இந்த மெகா பேரணிக்கு ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பது இன்னும் உறுதியாகவில்லை. இவருக்கு பதிலாக இவரது சார்பில் வேறு யாரையாவது அரவிந்த் கெஜ்ரிவால் பிரதிநிதியாக அனுப்பலாம். ஏனெனில், டெல்லி, குஜராத் மற்றும் ஹரியானாவில் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் கூட்டணி அமைத்துள்ளன. பஞ்சாபில் இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று எதிராக தேர்தலில் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.