செக் மோசடி மற்றும் பெண்ணை சாதி பெயரை குறிப்பிட்டு தரக்குறைவாக திட்டியதாக பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த வழக்கின் அடிப்படையில் குற்றவாளிக்கு 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 16000 ரூபாய் அபராதம் விதித்து, அதைக் கட்ட தவறினால் மேலும் ஒரு மாத சிறை தண்டனை விதித்து தேனி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


NDA meeting: பாஜக கூட்டணி எம்.பிக்கள் இன்று ஆலோசனை - 9ம் தேதி மாலை 5 மணிக்கு மோடி பதவியேற்பு - கிஷன் ரெட்டி


தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அப்பிபட்டியை சேர்ந்த காமராஜ் ராஜேஸ்வரி தம்பதியருக்கு பிரபாகரன், பிரசாந்த் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி பகுதியைச் சேர்ந்த ஐயப்பராஜ் என்பவர் நடத்தி வரும் கேட்டரிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகவும், அப்பொழுது இருவரையும் வெளிநாட்டில் உள்ள ஹோட்டலில் வேலை வாங்கித் தருவதாக கூறி 2017 ஆம் ஆண்டில் 3 லட்சம் ரூபாய்  பெற்றுள்ளார். ஆனால் ஓராண்டாக வேலை வாங்கி தராமல் இருந்த நிலையில் கொடுத்த பணத்தை கேட்டபோது செக் கொடுத்துள்ளார்.




ஆனால் வங்கியில் செக்கை கொடுத்த பொழுது பணம் இல்லாமல் திரும்பி வந்ததால் ராஜேஸ்வரி பணத்தைத் திரும்பத் தருமாறு ஐயப்பராஜிடம் கேட்டபோது, சாதி பெயரை கூறி தரக்குறைவாக தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியதாக, தேனி பிசி,பட்டி காவல் நிலையத்தில்  பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், பட்டியல் இனத்தோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் செக் மோசடி ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


Sunapha Yogam: சாமானிய மக்களையும் கோடீஸ்வரனாக்கும் சுனபா யோகம் - எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?


குடையுடன் போங்கள்: காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டில் இன்றைய வானிலை நிலவரம் என்ன?


மேலும் இந்த வழக்கு விசாரணையானது, தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள பட்டியல் இனத்தோர்  மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவுற்று சாட்சியங்களின் அடிப்படையில் ஐயப்பராஜ் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு குற்றவாளிக்கு பட்டியல் இனத்தோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆறு மாதம் கடுங்காவல்  சிறை தண்டனையும் மற்றும்  16,000 ரூபாய் அபராதமும் அதைக் கட்ட தவறினால் மேலும் ஒரு மாத கடுங்க காவல் சிறை தண்டனை விதித்து வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனுராதா தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த தீர்ப்பை தொடர்ந்து குற்றவாளி சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.