தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்தது. இதன் காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு மேலாக அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் பெய்த மழையால் வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் சோத்துப்பாறை, மஞ்சளாறு, வைகை அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.


Japan Twitter Review: கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான்.. அதிரடியா? சுமாரா? ட்விட்டர் ரசிகர்கள் சொல்வது என்ன?



வைகை அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டும் பட்சத்தில் உபரிநீரை அதிகமாக ஆற்றில் திறக்காமல் பாசனக்கால்வாய் வழியாக திறக்கவும் திட்டமிடப்பட்டது. எதிர்பார்த்தவாறு வைகை அணை நீர்மட்டம் நேற்று மாலை 71 அடியை எட்டியது. இந்நிலையில் மதுரை திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து  பெரியார் பாசன பகுதியில் உள்ள இருபோக சாகுபடி நிலங்களின் முதல் போக சாகுபடிக்காக வினாடிக்கு 900 கனஅடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் 45 நாட்களுக்கு முழுமையாகவும் 75 நாட்களுக்கு முறை வைத்தும் தண்ணீர் திறக்கப்படும்,


Jigarthanda Doube X Twitter Review : ராகவா லாரன்ஸ் எஸ். ஜே சூர்யா காம்போ எப்படி? ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ட்விட்டர் விமர்சனம்..



இதன் மூலம் மதுரை திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.இந்தத் தண்ணீரை தேனி மதுரை மாவட்ட ஆட்சியர்கள் திறந்து வைக்க தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி , வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் திறக்கப்பட்ட தண்ணீருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே நள்ளிரவில் வைகை அணை நிரம்பியதால் தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.


TN Rain Alert: தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி? தமிழ்நாட்டில் மழை இருக்குமா? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்



 


ADMK - OPS Case: அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த தடை.. ஓபிஎஸ்-ன் மேல்முறையீட்டில் இன்று விசாரணை


தற்பொழுது அணையில் நீர் இருப்பு அணையின் முழு கொள்ளளவான 71 அடியில் 70.60 அடியாக உள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்து அணைக்கு நீர்வரத்து 2816 கன அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து நீர் நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பிற்கு பின் செய்தியாளர்களை அமைச்சர் சந்தித்தபோது, பெரியார் ஒரு போக பாசன விவசாயிகள் திறந்து விடப்பட்டுள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயிகள் பயனடைய வேண்டும் என தெரிவித்தார்.