கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” (jigarthanda double x)படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இங்கு காணலாம். 


இளம் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் 2வது படமாக 2014 ஆம் ஆண்டு வெளியானது “ஜிகர்தண்டா”. இந்த படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம், கருணாகரன், அம்பிகா என பலரும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படம் கேங்க்ஸ்டர் கதையை அடிப்படையாக கொண்டது.


மிகவும் வித்தியாசமாக படமாக்கப்பட்டிருந்ததால் ஜிகர்தண்டா படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது. இந்த படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா வென்றார். 


இந்த படத்துக்குப் பின் கார்த்திக் சுப்பராஜ் பல படங்களை இயக்கினாலும் அவை எதுவும் ஜிகர்தண்டா அளவுக்கு இல்லை என்றே ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் தான் “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன், சத்யன், ஷைன் டைம் சாக்கோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பிரீயட் ஃபிலிம் ஆக உருவாகியுள்ள ஜிகர்தண்டா படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.அவற்றில் சில கருத்துகள் இந்த செய்தி தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது.