தேனி அருகே உள்ள உப்புக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவருக்கு பாண்டீஸ்வரி என்பவருக்கும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் பாண்டீஸ்வரி சகோதரியான பரமேஸ்வரியை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக சங்கர் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில்  பரமேஸ்வரிக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தேனி அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது . அப்போது மருத்துவமனையில் குழந்தையை விற்பனை செய்வதற்காக ஒரு கும்பல் சங்கரை அணுகியதாகவும் கூறப்பட்டது.


CM Arvind Kejriwal: ”கடவுள் இருக்கார்” சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் கொதிப்புடன் சொன்ன அந்த வார்த்தை..!




குடிப்பழக்கத்திற்கு அடிமையான சங்கர் தனது குழந்தையை விற்பனை செய்ய முடிவு செய்த நிலையில் நேற்று  பரமேஸ்வரிக்கு தெரியாமல் குழந்தையை ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து சைல்டு லைன் குழுவினருக்கு தகவல் கிடைக்கவே வீரபாண்டி காவல் நிலையத்தில் குழந்தையை விற்பனை செய்ததாக சங்கர் மீது புகார் அளித்தனர் . இதுகுறித்து வீரபாண்டி போலீசார் சங்கர் மற்றும் அவரது பரமேஸ்வரி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.


Nayanthara : ஒரே நேரத்தில் ஹேக் செய்யப்பட்ட சிம்பு நயன்தாரா எக்ஸ் கணக்கு..குழப்பத்தில் ரசிகர்கள்




மேலும் குழந்தையை  விற்பனை செய்யப்பட்டது உண்மைதானா? எவ்வளவு பணம் பெற்று குழந்தையை விற்கப்பட்டார் என்று சங்கரிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் மதுரையில் குழந்தை இருப்பதாக சங்கர் கூறியுள்ளார். ஆனால் குழந்தை அங்கு இல்லை என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் குழந்தையை மீட்க சங்கர் மற்றும் அவரது மனைவியிடம் மற்றும் அவரது உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 




அப்போது குழந்தை ஒரு லட்ச ருபாய்க்கு விற்கப்பட்டது தெரியவந்த நிலையில் தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா புகாரில் குழந்தையை விலைக்கு வாங்கிய போடிநாயக்கனூர் ரெங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (42) அவரது மனைவி உமாமகேஸ்வரி (36) மற்றும் குழந்தையின் தந்தை சங்கர் (44) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிந்து தேனி அனைத்து மகளிர் காவல் துறையினர் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.