தீ விபத்தில் உயிரிழந்த குன்றக்குடி யானை சுப்புலட்சுமி உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட லாரியில் வைத்து கொண்டு செல்லப்பட்டது. பின் தொடர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், கண்ணீருடன் யானைக்கு விடை கொடுத்தனர்.


குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்


Kundrakudi Temple Elephant: ’குன்றக்குடிக்கு காவடி எடுத்தாலும் நடக்காது’ - என்பது தமிழகத்தில் பரவிக்கிடக்கும் பழமொழிகளில் ஒன்று. இப்பழமொழியால் குன்றக்குடிக்கு காவடி எடுத்தால் நினைத்தவை கை கூடியே தீரும் என்பது எதிர்மறையாக வலியுறுத்தப்படுகிறது. அந்த அளவிற்கு நினைத்த காரியங்களை நிறைவேற்றும் வல்லமை கொண்ட கோயிலாக குன்றக்குடி முருகன் கோயில் பார்க்கப்படுகிறது. இத்தலம் தமிழ்நாட்டில்  பிரார்த்தனைத் தலங்கலில் மேன்மை வாய்ந்தது. நோய் நீக்கம், துன்ப நீக்கம், குழந்தை வரம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றை குன்றக்குடி சண்முகநாதனிடம் பக்தர்கள் வேண்டுகின்றனர். இங்கு தேனாற்று நாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிப்பது கூடுதல் சிறப்பு.


Meenakshiyamman temple ; சிவபெருமான் பிட்டுக்கு மண்சுமந்த லீலை ; மதுரையில் நடைபெற்ற ஸ்வாரசியம் !


குன்றக்குடி மயில் மலை


குன்றக்குடி மலையானது முருகனின் ஊர்தியான மயிலா பார்க்கப்படுகிறது. அப்பெருமான் சாபத்தால் மயிலுருவத்தில் மலையாக இருந்து சாபவிமோசனம் பெற்றதால் மயில்மலை என்று பெயர் வந்துள்ளது. குன்றக்குடி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோயில் ஸ்தலமாகும். இதனால் பிள்ளையார்பட்டிக்கு வரும் பக்தர்கள் குன்றக்குடி முருகனையும் தரிசித்து செல்வார்கள். இப்படி முக்கியமான பார்க்கப்படும் குன்றக்குடி கோயிலின், யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


குன்றக்குடி கோயில் யானை சுப்புலட்சுமி இறப்பிற்கு பலரும் அஞ்சலி


குன்றக்குடி சண்முகநாதன் கோயிலில் உள்ள கோயில் யானை சுப்புலெட்சுமி நேற்று முன் தினம் தீ விபத்தில் படுகாயம் அடைந்து. சிகிச்சை பலன் இன்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்த  சுப்புலட்சுமி யானையின் உடல் குன்றக்குடி மடத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு  தவத்திற்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அதிகாலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். குன்றக்குடி கிராமம் முழுவதும் கடைகளை வியாபாரிகள் அடைத்து யானைக்கு அஞ்சலி செலுத்தினர்.


அதன் பின்பு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் மலர் மாலையிட்டு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஏராளமான கிராம மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மறைந்த யானை சுப்புலட்சுமிக்கு கண்ணீருடன் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து குன்றக்குடிக்கு வருகை தந்த மதுரை ஆதீனம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்


அதன் பின்பு மறைந்த யானை சுப்புலட்சுமி  கிரைன் மூலம் தூக்கப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட லாரியில் ஏற்றப்பட்டது. குன்றக்குடி சண்முகநாதன் கோயில் மலையை சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் இறுதி ஊர்வலத்தில் பின் தொடர்ந்தனர். காரைக்குடி - மதுரை சாலையில் உள்ள இடத்தில் யானை சுப்புலட்சுமி உடல் கால்நடை மருத்துவ குழுவால் உடல் கூறு ஆய்வுக்குப் பின் நல்லடக்கம் செய்யப்பட்டது. கண்ணீர் வெள்ளத்தில் யானையின் உடல் விதைக்கப்பட்டது.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Jawan : ஜவான் படத்தில் நடித்தது ஒரு மோசமான அனுபவம்.. என்னை மோசமாக நடத்துனாங்க.. குமுறிய நடிகர்


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - நான் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை; மன்னிப்பு கேட்க நேரம் கேட்டதே ஸ்ரீனிவாசன்தான்: வானதி விளக்கம்!