”கல்வெட்டுகள் தொடர்பான அமைப்பு முறை பொதுவாக கல்வெட்டு மங்களச்சொல், காலம், மெய்க்கீர்த்தி, செய்தி, ஒம்படைக்கிளவி, எழுத்து என அமைந்திருக்கும் இவ்வாறான  கல்வெட்டுகள் கொடை மற்றும் பிறவற்றிற்காக வழங்கப்படும்  செய்திகளும்” - தொல்லியல் வகுப்பில் விளக்கப்பட்டன.


தமிழ் மாணவர்களுக்கு கல்வி இடைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.


சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் முதுகலைத்தமிழ்  இரண்டாம் ஆண்டு  மாணவர்களுக்கு கல்வி இடைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் மாணவர்களுக்கு அருங்காட்சியகவியல் தொடர்பான கருத்துரைகளும் அருங்காட்சியக பொருட்களை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் தொல்லியல் விழிப்புணர்வு ஏற்படுத்துதலோடு கல்வெட்டுகள் அமைப்பு முறை, படி எடுக்கும் முறை தொல்லியல் தளங்களை பாதுகாத்தல் போன்ற பயிற்சிகள்  வழங்கப்பட்டு வருகின்றன. பயிற்சி நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தி.பக்கிரிசாமி செய்து நடத்தி வருகிறார்.


- Meenakshiyamman temple ; சிவபெருமான் பிட்டுக்கு மண்சுமந்த லீலை ; மதுரையில் நடைபெற்ற ஸ்வாரசியம் !


கல்வெட்டு படி எடுக்கும் தொல்லியல் சார்ந்த பயிற்சி.


கல்வெட்டுகள் தொடர்பான அமைப்பு முறை பொதுவாக கல்வெட்டு மங்களச்சொல், காலம், மெய்க்கீர்த்தி, செய்தி, ஒம்படைக்கிளவி, எழுத்து என அமைந்திருக்கும் இவ்வாறான  கல்வெட்டுகள் கொடை மற்றும் பிறவற்றிற்காக வழங்கப்படும்  செய்திகளும் விளக்கப்பட்டன, சிவகங்கை பகுதியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் குறித்த செய்திகளும் விளக்கப்பட்டன. பயிற்சியில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் கல்வெட்டு படியெடுக்கும் முறை பற்றி ஆசிரியர் பயிற்றுநரும் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனமான புலவர் கா. காளி ராசா மாணவர்களுக்கு கருத்துரையும் செயல் விளக்கமும் அளித்தார்.


நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்திய பாறை ஓவியங்கள்


இதில் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகள் சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரி முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவிகள் என 33 பேர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இவர்கள் களப்பயணமாக, சிவகங்கை மாவட்டம் திருமலை சென்று நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்திய பாறை ஓவியங்கள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தமிழி எழுத்து கல்வெட்டு, சமணப் படுக்கைகள், முற்கால பாண்டியர் குடைவரை, மலைக் கொழுந்தீஸ்வரர் கோயில் மற்றும் பிற்கால பாண்டியர் கல்வெட்டுகள் போன்றவற்றை பார்த்து  கல்வெட்டு செய்திகளையும் தெரிந்து கொண்டனர். இவ்வாறாக படிக்கும் காலத்திலே திறன் சார்ந்த பயிற்சியாக இந்த கல்வி இடைப் பயிற்சி அமைந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.


சிவகங்கை மாணவர்களுக்கு தொல்லியல் விழிப்புணர்வு அவசியம்


இது குறித்து தொல்நடைக் குழுவைச் சேர்ந்த காளிராசா நம்மிட்டம்...,” சிவகங்கை மாவட்டத்தில் கீழடியை போல் 100க்கும் மேற்பட்ட இடங்கள் தொல்லியல் எச்சங்கள் பரவிக் கிடக்கிறது. இதனை தொல்லியல் ஆய்வு செய்ய அரசுடன் இணைந்து பணி செய்ய தொல்லியல் ஆர்வலர்களும் தேவைப் படுகின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் பழமையான கல்வெட்டுக்கள், நடுகல், முதுமக்கள் தாழிகள் என ஏகப்பட்ட விசயங்கள் இருக்கின்றனர். எனவே தொல்லியல் விழிப்புணர்வு இப்பகுதி மக்களுக்கு அவசியம் தேவை. இந்த விழிப்புணர்வு முயற்சியில் எங்கள் தொல்நடைக் குழுவின் பங்களிப்பு இருப்பது மகிழ்ச்சியை தருகிறது” என்றார்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Thalapathy 69 : குட்பை.. முடிவுக்கு வரும் தளபதி விஜய் சகாப்தம்.. தளபதி 69 படக்குழு வெளியிட்ட சிறப்பு வீடியோ


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Nayanthara : ஒரே நேரத்தில் ஹேக் செய்யப்பட்ட சிம்பு நயன்தாரா எக்ஸ் கணக்கு..குழப்பத்தில் ரசிகர்கள்