கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - தொடர்ந்து 10 வது நாளாக குளிக்க தடை

தொடர்  மழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து கடந்த 12ம் தேதியிலிருந்து இன்று வரையில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் இயற்கை எழில் கொஞ்சும் விதமாக கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கொடைக்கானல் மலையில் இருந்தும், மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்தும் நீர்வரத்து ஏற்படுகிறது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு வந்து குளித்துவிட்டு செல்கின்றனர்.

Continues below advertisement

4 மாநில ரேஷன் கடைகளுக்கு புதிய பெயர்! நாடு முழுவதும் மாற்றுகிறதா மத்திய அரசு?


இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடைக்கானல், வட்டக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து அருவிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் தொடர்ந்து மழை பெய்ததால் கடந்த 10 நாட்களாகவே அருவியில் நீர்வரத்து குறையவில்லை.

WT20 WC: வங்கதேசத்தில் அசாதாரண சூழல்! மகளிர் டி20 உலகக்கோப்பை நடத்த ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடித்தது ஜாக்பாட்!


இந்த நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கன மழையால் கும்பக்கரை அருவியில்  பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து இன்று 10 வது  நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து குறைந்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை வனத்துறை அறிவித்த நிலையில் கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து கடந்த 12ம் தேதியிலிருந்து இன்று வரையில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

91 Years of Mettur Dam: 91-வது ஆண்டில் கம்பீரமாக அடி எடுத்து வைக்கும் மேட்டூர் அணை; இதன் வரலாறு தெரியுமா?


இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 12ம் தேதி முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.  இதனால் 10வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்வதாக வனத்துறை அறிவித்துள்ளது. மேலும் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு நீரின் அளவு குறைந்து சீராகும் வரை இந்தத் தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement