தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் மூலம் ஐந்து மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது. மதுரை மற்றும் தேனி மாவட்டங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது வைகை அணை. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கன மழை பெய்யும் சமயங்களில் உயர்ந்து காணப்படும்.
அப்போது அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
அதனால் வைகை அணை நீர்மட்டம் 60 அடிக்கும் மேல் தொடர்ந்து நீடித்து வந்தது. மழையின் அளவு திடீரென குறைந்ததால் தண்ணீர் வரத்தும் குறைந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 60 அடிக்கும் கீழ காணப்படுகின்றது. அணையில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் மூன்று கட்டங்களா தண்ணீர் திறக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வைகை அணை மற்றும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் அந்த வகையில் நேற்று முன்தினம் காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 57.45 அடியாக காணப்பட்டது, அணைக்கு நீர்வரத்து 727 கன அடி, அணையில் நீர் திறப்பு 1699 கன அடியாக இருந்த நிலையில் நீர் இருப்பு 3132 மில்லியன் கன அடியாக காணப்பட்டது.
TVK Vijay : "விஜய் பங்கேற்கும் பொது நிகழ்ச்சியின் தேதி அறிவிப்பு” யாரோடு கைக்கோர்கிறார் தெரியுமா..?
நேற்று முன்தினம் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 120.85 அடியாக இருந்த நிலையில் நீர்வரத்து 190 கன அடியாக காணப்பட்டது, அணியில் இருந்து நீர் திறப்பு 867 கன அடியாக இருந்த நிலையில் நீர் இருப்பு 2796 மில்லியன் கன அடியாக குறைந்து காணப்பட்டது
இன்றைய காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் -56.56 அடி
வைகை அணை நீர் வரத்து -568 கன அடி
வைகை அணையில் இருந்து நீர் திறப்பு-69 கன அடி
வைகை அணையின் நீர் இருப்பு -2978 மில்லியன் கன அடி
இன்று காலை நிலவரபடி முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் - 120.15 அடி
முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து – 320 கன அடி
முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு -755 கன அடி
முல்லை பெரியாறு அணையின் நீர் இருப்பு - 2658மில்லியன் கன அடி