அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்சி நிர்வாகிகள் தங்கி இருந்த லாட்ஜில் வருமானவரித்துறை சோதனை நடத்தினர். நான்கு மணி நேர சோதனைக்கு பின் எந்த ஒரு ஆவணங்களும் மற்றும் பணம் கிடைக்க பெறாமல் திரும்பி சென்றனர்.


ATM Theft: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை; ரூ.10 லட்ரூசமா? எப்படி? - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்!




தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள லக்கி லாட்ஜில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் 15க்கும் மேற்பட்டோர்  தங்கி இருந்து தேனி மக்களவைத் தொகுதியில் உள்ள பெரியகுளம் சட்டமன்ற பகுதியில் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லாட்ஜில் தங்கி இருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பணம் வைத்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் நான்கு நபர்கள் கொண்ட வருமானவரித் துறையினர் மற்றும் பெரியகுளம் கோட்டாட்சியர் முத்து மாதவன்  தேர்தல் பறக்கும் படை பிரிவை சேர்ந்த அதிகாரிகள் இரவு 9  மணி முதல் நிர்வாகிகளின் அறைகளில் சோதனை நான்கு மணி நேரமாக  சோதனை இட்டனர்.


CSK vs SRH: எண்ட்ரீ கொடுத்த தோனி.. பிரமித்து போன பேட் கம்மின்ஸ்.. என்ன சொன்னார் தெரியுமா?




இந்த சோதனையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக  தேர்தல் பொறுப்பாளர்கள் தங்கி இருந்த அறைகளில் இருந்து  எந்த ஒரு ஆவணமும்  பணமும் கைப்பற்றப்படாத நிலையில்  சோதனையில் ஈடுபட்ட வருமானவரித்துறையினர், கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் பறக்கும் படையின் அங்கிருந்து சென்றுள்ளனர். சோதனையின் முடிவில் பெரியகுளம் கோட்டாட்சியர் முத்து மாதவனிடம் கேட்டபொழுது, வருமானவரித்துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் சோதனை இட்டதாகவும் தேர்தல் நேரம் என்பதால் தான் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் ஆய்வின் போது உடன் இருந்ததாகவும் தெரிவித்தார்.


Breaking News LIVE: ரூ.53 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் - சவரனுக்கு ரூ.840 உயர்வு




தேனி மக்களவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்கி இருந்த அறையில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியது அக்கட்சி நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.