Breaking News LIVE: உழைப்பால் உயர்ந்ததாக எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
உழைப்பால் உயர்ந்தேன் என்று எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கால்வாயில் குளித்த 2 பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துரோகிகளுக்கு பாடம் புகட்டுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்போது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதற்கான முன்பதிவு நாளை தொடங்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் 2024க்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார். கச்சத்தீவை மீட்க நடவடிக்கை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கூடங்குளம் அணுமின் நிலையம் மூடல் உள்ளிட்ட 74 வாக்குறுதிகளை வெளியிட்டார்.
விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளருமான ந.புகழேந்தி இவர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். நேற்றைய தினம் விக்கிரவாண்டி அருகேயுள்க வி. சாலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது திடீரென மேடையிலையே மயங்கி விழுந்த நிலையில் அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையானது நடைபெற்று வருகிறது. நெல்லை, கோவையில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் உள்ளிட்ட முக்கிய நபர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது.
ஜப்பானில் ஹோன்ஷூ நகரில் 3வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹோன்ஷூ நகரில் ஏற்கனவே ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக நிலநடுக்கம் பதிவான நிலையில், மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 52, 920 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் விலை ரூ.2 உயர்ந்து ரூ.87க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆஸ்திரேலியாவில் தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் 100 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. மோசமான வானிலை காரணமாக சிட்னி விமான நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
மக்களவை தேர்தலுக்கான தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - இன்று கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத், சிதம்பரம் விசிக வேட்பாளர் தொல். திருமாவளவன் ஆகியோருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்கிறார்.
மக்களவை தேர்தலுக்கான மதிமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறார் வைகோ. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடுகிறார்.
மயிலாடுதுறை பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையை பிடிக்க 4வது நாளாக வனத்துறை தீவிட தேர்தல் வேட்டை நடத்தி வருகின்றனர். ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு உள்ளிட்ட இடங்களில் கூண்டுகளை வைத்து வனத்துறை கண்காணித்து வருகின்றனர்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் மோதும் போட்டி இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் தொடங்குகிறது.
பேரிடர் காலங்களிலும் ஒன்றிய பாஜக அரசு பாராமுகமாக நடந்து கொள்கிறது. பாராமுகமாக இருக்கும் ஒன்றிய அரசிடம் மாநிலத்தின் திட்டங்களுக்கான நிதியை எப்படி எதிர்பார்க்க முயும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Background
தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, மத்தியில் உள்ள பாஜக முதல் பல்வேறு சிறிய கட்சிகள் வரை மக்களவை தேர்தலில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், பிரச்சாரத்தின்போது ஒவ்வொரு கட்சிகளும் பிற கட்சிகள் அளித்த, செய்த தவறிய வாக்குறுதிகளை குறிப்பிட்டு குறை கூறி வருகின்றனர்.
இப்படி ஒரு புறம் இருக்க டெல்லியில் நேற்று காங்கிரஸ் கட்சி தங்களது மக்களவை தேர்தலுக்கான வாக்குறுதியை வெளியிட்டது. அதில், நீட் தேர்வு ரத்து, மாநிலத்திற்கு ஏற்றவாறு புதிய கல்விக்கொள்கை அமல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, கல்விக்கடன் ரத்து என பல்வேறு அம்சங்கள் நிறைந்தவை இடம் பெற்றிருந்தது.
தேர்தல் போடு போடு என போட்டுதாக்கும் வேளையில், வெயில் வேற வெறியாய் வெடித்து தள்ளுகிறது நம் மீது. சென்னை, புதுச்சேரி, வேலூர், மதுரை என தமிழ்நாட்டில் ஐபிஎல்-ஐ விட நாள்தோறு சதங்கள் அடிக்கப்பட்டு வருகிறது. தென்னிந்தியாதான் இப்படி என்றால் டெல்லி-என்சிஆர், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட வட இந்தியாவின் பல மாநிலங்களில் வெப்பம் தட்டி எழுப்பியுள்ளது. பகலில் கொளுத்தும் வெயிலால் மக்கள் அவதிக்குள்ளாகினர். பல மாநிலங்களில் 35 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வெயிலுக்கு இதமாக மழையும் அவ்வபோது நம்மை குளிர செய்கிறது. மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம், அஸ்ஸாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் இமயமலைப் பகுதிகளில் பலத்த காற்றின் காரணமாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல்லில் தோனியை பார்க்கணும் ஆனா, தோல்வியோட இல்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. இன்று ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -