டோக்கன் சிஸ்டத்திற்கு ஹெட்மாஸ்டர் தங்கதமிழ்செல்வன். தற்பொழுதும் தேனி பாராளுமன்ற தொகுதியில் டோக்கன் சிஸ்டத்தை துவங்கி உள்ளார் எனக் கூறி  என் டி ஏ கூட்டணியின் சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனை ஆதரித்து அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் சிஆர் சரஸ்வதி பரப்புரை மேற்கொண்டார்.




தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  கெங்குவார்பட்டி தேவதானப்பட்டி மற்றும் பெரியகுளம் நகர் பகுதியில் NDA கூட்டணி சார்பில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை ஆதரித்து  அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நடிகை சிஆர் சரஸ்வதி  பரப்புரை மேற்கொண்டார். பரப்புரையின் போது  NDA கூட்டணியில்  பிரதமர் வேட்பாளர் மோடி, ஆனால் இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என கேள்வி எழுப்பினார், செய்தியாளர்கள் கமலஹாசன் இடம் அரசியல் கட்சி தொடங்கி உள்ளீர்கள் மக்களை ஏன் சந்திக்கவில்லை என கேள்வி கேட்டதற்கு  யார் முழு நேர அரசியல்வாதி விளக்கிக் கூறி கேலி செய்து பிரச்சாரம் மேற்கொண்டார்.




 நாளொரு மேனி பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதன் அல்ல, எம்ஜிஆர் பாடலுக்கு ஏற்ப தற்போதைய எடப்பாடி தலைமையிலான அதிமுக நாடகத்தை நடத்தி வருவதாகவும், ராஜன் செல்லப்பா எடப்பாடி பிரதமர் ஆவார் எனக் கூறியதை சிஆர் சரஸ்வதி நடித்த என் புருஷன் குழந்தை மாதிரி என்ற படத்தில் வருங்கால பிரதமர் வருங்கால ஜனாதிபதி என காசு கொடுத்து கூற வைத்ததை குறித்து கூறி வாங்கின பணத்துக்கு மேல கூவுகிறான்  கூறியதை மேற்கோள்காட்டி பரப்புரை மேற்கொண்டார்.




மேலும் எடப்பாடி தலைமையிலான அதிமுக அலிபாபாவும் 40 திருடர்களும் சேர்ந்த கூட்டம் தெரியாத்தனமாக கட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் சசிகலா கொடுத்து விட்டார். எடப்பாடி பழனிச்சாமிக்கு யார் யாருக்கு துரோகம் செய்தார் என வரிசையாக பட்டியலிட்டதோடு, நான்கரை ஆண்டுகள் ஆட்சியில் இருக்க யார் யாரிடம் காலில் விழுந்து ஆட்சி செய்தார், என்பது உலகம் அறிந்தது, பாரத பிரதமர் மோடி கூறியது போல் சசிகலா டிடிவி ஓபிஎஸ் ஒன்றாக இருந்திருந்தால் இன்று திமுக ஆட்சிக்கு வந்திருக்காது, ஆனால் இந்த தேர்தலிலும் திமுக ஜெயிக்க எடப்பாடி கூட்டம் வேலை செய்வதோடு திமுகவை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட அதிமுக இன்றைக்கு திமுகவிற்கு நண்பனாக இருந்து வேலை பார்க்கிறது.


மேலும் தேனியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்கத்தமிழ்செல்வன் குறித்து பேசுகையில்  டோக்கன் சிஸ்டத்தை உருவாக்கியவரே தங்க தமிழ்ச்செல்வன் தான், டோக்கன் சிஸ்ட பள்ளிக்கூடத்திற்கு ஹெட் மாஸ்டர் தங்கத்தமிழ்செல்வன், தற்பொழுதும்  டோக்கன் கொடுத்து தேனி பாராளுமன்ற தொகுதியிலும் தனது பணியை தொடர்ந்துள்ளார் என்று குற்றம் சாட்டினார்.




தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துறைமுருகனின் மகன் பரப்புரையின் போது  பெண்களைப் பார்த்து திமுக கொடுத்த ஆயிரம் ரூபாய்க்கு பவுடர் பூசி வந்திருக்கீங்களா? என்று பிரச்சாரத்தில்  பெண்களைப் பார்த்து கேட்டதை கண்டித்ததோடு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கிய திட்டங்களுக்கு இலவசம் என்ற வார்த்தை வரக்கூடாது என்று கூறியதோடு, வழங்கப்பட்ட திட்டங்கள் அனைத்திற்கும் இடையை இல்லா எனக்கூறி வழங்கப்பட்டது என கூறி இலவசம் என்ற வார்த்தையை விரும்பாதவர் ஜெயலலிதா என கூறினார்.


மேலும் ராமநாதபுரத்தில் போட்டியிடும் ஓபிஎஸ் வெற்றி பெறுவது உறுதி என்பதோடு ஆர் பி உதயகுமார் இன்னும் ஆயிரம் பன்னீர்செல்வத்தை  அங்கு போட்டியிட  வைத்தாலும் ஒரிஜினல் ஒரிஜினல் தான் எனக் கூறினார். மேலும் 14 ஆண்டுகள் கழித்து ராமர் வனவாசம் சென்று திரும்பிய பொழுது மக்கள் எப்படி வரவேற்றார்களோ அதேபோல்  14 ஆண்டுகள் கழித்து தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டுள்ள டிடிவி தினகரனுக்கு மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து வருகின்றனர் என பரப்புரை மேற்கொண்டு NDA கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களியுங்கள் என பரப்புரை மேற்கொண்டார்.