தேனி அரசு மருத்துவமனையில் இறந்ததாக சான்றிதழ் வழங்கப்பட்ட குழந்தைக்கு மயானத்தில் உயிர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியத்


தேனி மாவட்டம் பெரியகுளம் தாமரைக்குளம் பேரூராட்சி தாசில்தார் நகர் பகுதியில் வசித்து வருபவர் பிலவேந்திரன் ராஜா அவரது மனைவி பாத்திமா மேரி என்ற வானரசி கர்ப்பிணியாக இருந்தார்.


இந்நிலையில், அவருக்கு நேற்று இரவு 12.30 மணி அளவில் பிரசவ வலி ஏற்படவே, தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அதிகாலை  3.30 மணி அளவில பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்ததாகக் கூறிய மருத்துவர்கள், இறந்த குழந்தையின் உடலை காலை 8.30 மணிக்கு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


TN Neet Exam Row: 'எல்லாத்தையும் எதிர்க்கிறார்.. சூர்யாவுக்கு என்னதான் பிரச்னை?' - கொதிக்கும் பாஜக இளைஞரணி!


இதனைத் தொடர்ந்து, குழந்தையை அடக்கம் செய்வதற்காக பெரியகுளம் கிருத்தவர்கள்  மயானத்திற்கு கொண்டு சென்றனர். புதைப்பதற்கு முன்பு பார்த்த போது குழந்தை உயிருடன் இருப்பது தெரியவந்தது. குழந்தைக்கு இதயத்துடிப்பு இருந்ததை அதிர்ச்சி கலந்த ஆனந்தத்துடன் பெற்றோர் குழந்தையை மீண்டும் தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு தூக்கிச் சென்றனர். தற்போது குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.


உயிரோடு இருந்த குழந்தையை இறந்ததாக மருத்துவர்கள் கூறியதால் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும், தேனி அரசு மருத்துவமனை அலட்சியம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.


Ramadoss on Megathattu Dam: 'மேகதாது விவகாரத்தில் எடியூரப்பாவின் பேச்சை நம்ம வேண்டாம்' - எச்சரிக்கும் ராமதாஸ்