இந்த செயற்குழு கூட்டத்தில் பாஜக அகில பாரத அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் காணொலி வாயிலாக உரையாற்றினார். இந்த செயற்குழு கூட்டத்தில் ஜெய்ஹிந்த் என்ற சொல்ல ஆளுநர் உரையில் இல்லாதது, நீட் தேர்வு குறித்து விசாரிக்க ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்த முதல்வர் ஸ்டாலினை கண்டித்தும், நீட் தேர்வு மற்றும் ஒளிப்பதிவு சட்ட வரைவு குறித்து கருத்து தெரிவித்திருந்த நடிகர் சூர்யாவை கண்டித்தும், கொரோனோ 2ஆவது அலையை வெற்றி கண்ட பிரதமர் மோடிக்கு பாராட்டியும் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



பாஜக இளைஞரணி நிறைவேற்றியுள்ள இரண்டாவது தீர்மானத்தில், பணக்காரர்கள் வீட்டு பிள்ளைகள் மட்டுமே மருத்துவர்கள் ஆக முடியும் என்ற நிலையை மாற்றி, திறமையான ஏழை மாணவர்களின் மருத்துவ கனவையும் நிறைவேற்றி வருகிறது. நீட் தேர்வு, இந்த நிலையில் தமிழக மாணவர்களை குழப்பும் வகையில் நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா தொடர்ந்து உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருகிறார்.


மேலும் ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு 2021 தொடர்பாகவும் தவறான கருத்துகளை நடிகர் சூர்யா பரப்பி வருகிறார். தற்போது ஒரு திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த விதையை மாற்றி ஒரு படத்தின் தணிக்கை சான்றிதழ், அந்த படத்தின் ஆயுள் முழுக்க செல்லும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.



கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இந்திய இறையாண்மைக்கு எதிராகவோ, இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலோ, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துகின்ற வகையிலோ, ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, ஒரு குறிப்பிட்ட இனத்தையோ, ஒரு குறிப்பிட்ட கருத்துக்களையோ, நீதித்துறையின் மாண்மை சீர்குலைக்கும் வகியிலோ கருத்துக்களோ அல்லது காட்சிகளோ இருந்தா, அந்த திரைப்படம் திரைக்கு வந்த பிறகும் அதன் தணிக்கை சான்றிதழில் மாற்றம் செய்வதற்கோ அல்லது தணிக்கை சான்றிதழை ரத்து செய்வதற்கோ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல படத்தின் தன்மையை பொறுத்து ஏழு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பார்க்கும் வகையில் யூ என்றும், 7 வயதுக்கு மேற்பட்டவரக்ள் பார்க்கும் வகையில் யூ/ஏ 7 பிளஸ் என்ரும் 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் வகையில் யூ/ஏ16 பிளஸ் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.


ஒரு படத்தின் இயக்குநரின் எழுத்துப்பூர்வமான அனுமதி இன்றி, அந்த படத்தின் கில பகுதிகளையோ, முழு படத்தையுமோ, அல்லது ஒலி, ஒளிப்பதிவையோ திருடக்கூடாது. அப்படி திருடினால் 3மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டைனையும், குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாய் முதல் அந்த படத்தின் மொத்த தரயாரிப்பு செலவில் 5% வரை அபராதமும் விதிக்க புதிய சட்டத் திருத்தம் வகை செய்கிறது. இந்தில் நடிகர் சூர்யாவுக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை. கருத்து சுதந்திரத்து என்ன ஆபத்து வந்தது என்றும் புரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் படைப்பாளிகள் உரிமை பாதுகாக்கப்படுகிறது. எனவே மோடி அரசு கொண்டு வரும் மக்கள் நல திட்டங்களையும், சட்டங்களையும் வேண்டுமென்றே, உள்நோக்கத்துடன் சுய விளம்பரத்திற்காக தொடர்ந்து எதிர்த்து வரும் நடிகர் சூர்யாவை இந்த செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. நடிகர் சூர்யா அவர்கள், த்துடன் இதை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் பாஜக இளைஞரணி சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.