தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தேர்வாளர்கள் இன்று தொடங்கி வரும் ஜுலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்துவதற்கும் ஜுலை 19ம் தேதியே கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, செப்டம்பர் 14ம் தேதி தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சியின் இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.




டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி:


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 2 மற்றும் 2A தேர்விற்கு 2327 காலியிடங்களுக்கான அறிவிப்பு 20.06.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்ய வேண்டிய இணையதள முகவரி https://www.tnpsc.gov.in/ ஆகும்.


Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்


விண்ணப்பம் செய்ய கடைசி நாள் 19.07.2024. முதல்நிலை தேர்வு நடைபெறும் நாள் 14.09.2024. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறந்த வல்லுனர்களைக் கொண்டு 08.07.2024 அன்று துவங்கப்பட உள்ளது. இப்பயிற்சியின்போது இலவச பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு, ஒவ்வொரு பாடத்திற்கும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்.


தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயின்று, கடந்த குரூப் 2 மற்றும் 2A தேர்வில் 7 நபர்களும், குரூப் 4 தேர்வில் 10 நபர்களும் தேர்ச்சி பெற்று தற்போது பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.


TNPSC Recruitment: நடந்துவரும் குரூப் 2, 2ஏ விண்ணப்பப் பதிவு; தேர்வு முறை, கல்வித்தகுதி, பாடத்திட்டம்- முழு விவரம் இதோ!




எனவே தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய குரூப் 2 மற்றும் 2A  தேர்வுக்கு தயராகி கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்கள் இவ்வலுவலக நேரடி பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பயிற்சி வகுப்பில் சேருவது தொடர்பாக தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 63792 68661 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு  கொண்டு பயிற்சியில் சேர்ந்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  ஷஜீவனா அவர்கள் தெரிவித்துள்ளார்.