தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளான மேகமலை, வெள்ளிமலை வனப்பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக விட்டுவிட்டு பெய்த கனமழை காரணமாக ஆண்டிபட்டி அருகே உள்ளகோம்பைதொழு அருகே உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அருவியல் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் மழை குறைந்து அருவியல் தண்ணீர் வரத்து சீரான பிறகே சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Parliament Session: சபாநாயகருக்கு வாழ்த்து; தேர்தல் ஆணையத்துக்கு நன்றி! 18வது முதல் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி!




இதேபோல சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.


தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும் ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.


Vijay students meet : நாளை விஜய் பேசப்போகும் அரசியல் என்ன ? கட்சித் துவங்கிய பின் முதல் நிகழ்ச்சி ..! ஏற்பாடுகள் தீவிரம்




Kalki 2898 AD‌‌ Review: அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!


இதனால் சுருளி அருவியின் நீர் பிடிப்புபகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு , தூவானம் அணை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தொடர் தடை விதித்து உள்ளனர். அருவிப்பகுதியில் கன மழை பெய்து வருவதால் பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.