18வது முதல் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். நாடு முன்னேற்றம் அடைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 


அப்போது பேசிய அவர் மீண்டும் சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் ”காஷ்மீரில் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். 2024ஆம் ஆண்டு தேர்தலை வெற்றி கரமாக நடத்திமுடித்த தேர்தல் ஆணையத்து நன்றி. 60 ஆண்டுகளுக்கு பின் மக்கள் ஒரே அரசை மூன்றாவது முறையாக அமர்த்தியுள்ளனர். இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படுகிறது. அதில் முக்கியமான திட்டங்கள் இடம்பெறும் என நம்புகிறேன். 


அரசின் வாக்குறுதிகளில் மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஸ்திரமான அரசின் மூலமே மக்களின் எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படும். புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்களுக்கு வாழ்த்துகள். உலகிலேயே மிகவும் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. புதிய தொழில்நுட்பத்தில் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று, போர் என அனைத்தையும் கடந்து நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது. 






பெரும்பான்மை பலத்துடன் கூடிய ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த ஆண்டுக்கான பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும்” எனத் தெரிவித்தார். மேலும் சிறிய நகரத்துக்கும் விமான சேவை கிடைத்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இதனிடையே வடகிழக்கு மாநிலங்கள் குறித்து அவர் உரையாற்றும்போது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. இதேபோல் புதிய மருத்துவக் கல்லூரிகள் பற்றி பேசும் போது “நீட் நீட்” என முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 


ஆனாலும் தொடர்ந்து பேசிய குடியரசுத்தலைவர், “2036ல் இந்தியா ஒலிம்பிக் போட்டியை நடத்த தயாராக உள்ளது. சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் 125வது பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடப்படும். மத்திய அரசின் நடவடிக்கைகளால் மாநிலங்களின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது.