தொல்பொருள் துறையினர் அபிராமி கோயிலின் சிலை மற்றும் தூண்களை கோயிலிலேயே அருங்காட்சியகம் அமைத்து பக்தர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என புகைப்படங்களுடன் இந்து தமிழர் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்பினர் நூதன போராட்டம். திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் இந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் தலைமையில் இந்து அமைப்பினர் பலர் கோயிலின் சிலை புகைப்படங்களை வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.


"தெற்கில் இருந்து வடக்கு.. அனைவரின் குரல்களும் கேட்கப்படும்" - ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ராகுல் காந்தி!


திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் உடனுறை அபிராமி அம்மன் காளகஸ்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை அம்மன் திருக்கோயில் திண்டுக்கல் மாநகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு திருக்கோயிலில் திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2016 இல் முடிவடைந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில் முழுவதுமாக பழைய கல் தூண்கள் அகற்றப்பட்டு,  கல் சிலைகள் அங்கிருந்து அகற்றப்பட்டு கோவிலுக்கு சொந்தமான தேர்முட்டி அருகே உள்ள இடத்தில் பாலலயம் செய்து பொதுமக்கள் வழிபட்டு வந்தனர்.




பின்னர் கோவில் முழுவதும் புதிதாக புதுப்பிக்கப்பட்ட அங்கு 2016 முதல் வழிபாடு நடத்தப்பட்டது. இதில் பாலாலயம் செய்த சிலைகள் மற்றும் பழைய கல் தூண்கள் மண்ணில் புதைக்கப்பட்டன. தற்போது அவ்விடத்தில் தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருமண மண்டபம் கட்டுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூமி பூஜை போடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மண்டப பணிகளுக்காக ஜேசிபி எந்திரம் மூலம் குழி தோண்டும் பொழுது அங்கே முருகர் சிலை நாயக்க மன்னர் சிலை விளக்கேந்திய தேவதை சிலை என பல்வேறு சிலைகளும், கல்தூண்களும் சேதப்பட்டு மண்ணிலிருந்து வெளியே வந்தன.


Breaking News LIVE: கூட்டாட்சியை வலுப்படுத்துவோம் - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி




இது சம்பந்தமாக கோயிலின் செயல் அலுவலர் வருவாய்த்துறைக்கோ? தொல்பொருள் துறைக்கோ? தகவல் கொடுத்ததாக தெரியவில்லை மேலும் சிலைகள் கோயில் இருந்து மாற்றப்பட்டதா, அல்லது ஏற்கனவே அங்கு புதைக்கப்பட்டதா சிலைகள் மட்டும் இருந்ததா அல்லது வேறு வைரம் வைடூரியம் போன்ற விலை மதிக்க முடியாத பொருட்கள் இருந்ததா என்பது தெரியவில்லை. எனவே தமிழக அரசு அதிகாரிகளை வைத்து முறையாக அதனை விசாரிக்க வேண்டும்.




Jobs: பிளஸ் 2 தேர்ச்சி போதும்; சென்னை இளைஞர்‌ நீதி குழுமத்தில்‌ வேலை- விண்ணப்பிப்பது எப்படி?


வருவாய்த் துறைக்கும் தொல்பொருள் துறைக்கும் தகவல் அளிக்காத கோயில் செயல் அலுவலர் பணியிடை  நீக்கம் செய்ய வேண்டும். மேலும் கோயிலில் அருங்காட்சியகம் அமைத்து கற்சிலைகள் மற்றும் கல் தூண்களை பொதுமக்கள் பார்வையில் படுமாறு காட்சிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கோயில் செயல் அலுவலர் அலுவலகத்தில் மனுவாக வழங்கினார். இந்த நிகழ்வில் கோயிலில் மண்ணில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிலைகளின் புகைப்படங்களுடன் கோயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு மனு கொடுத்தனர்.