தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. அணையின் முழு கொள்ளளவு 69 அடியாக கணக்கிடப்படுகிறது. இந்தநிலையில் அணையின் நீர்மட்டம், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முழுக்கொள்ளளவான 69 அடியை எட்டியது.


MBBS BDS Rank List : எம்.பி.பி.எஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியல்.. வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!




இதனையடுத்து அணையில் இருந்து மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களின் முதல்போகம் மற்றும் ஒரு போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்ததால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதுடன், உபரிநீரும் ஆற்றில் திறக்கப்பட்டு வந்தது.


T20 World Cup 2022: இவர்கள் இருந்தாலே போதும், இந்தியா உலகக்கோப்பையை வெல்லும்.. அணியில் யார் ? யார் ? கணித்த ஐசிசி!





இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக நீரப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை. இதன்காரணமாக வைகை அணை நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது. இதனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிக்கு, 58-ம் கால்வாயில் தண்ணீர் திறப்பதும் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனையடுத்து வைகை அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.


இதன் எதிரொலியாக, கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வந்த வைகை அணை நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கியது. இன்று காலை வைகை அணை நீர்மட்டம் 68.50 அடியாக உயர்ந்தது.


Vegetables Price List: 100-ஐ நெருங்கும் சின்ன வெங்காயம்.. அதிரடியாக உயர்ந்த அவரை.. இன்றைய காய்கறி நிலவரம்..


வைகை அணைக்கு, வினாடிக்கு 2,094 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் விரைவில் முழுக்கொள்ளளவை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Vegetables Price List: 100-ஐ நெருங்கும் சின்ன வெங்காயம்.. அதிரடியாக உயர்ந்த அவரை.. இன்றைய காய்கறி நிலவரம்..


நீர்மட்டம் 69 அடியை எட்டியவுடன் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக திறந்து விடப்படும். வைகை அணை நீர்மட்டம் ஒரே ஆண்டில் 2-வது முறையாக நிரம்ப இருப்பதால், 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண