தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியரும், தொல்லியல் துறை ஆ ஆர்வலருமானவர் செல்வம். மூல வைகை ஆற்றங்கரை ஓரப்பகுதிகளில் விடுமுறை நாட்களில் தொல்லியல் சம்பந்தமான ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இந்த ஆய்வில் மயிலாடும்பாறை அருகே உள்ள மீன்பாறைகுட்டத்தை ஒட்டிய  பகுதியில் பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கு ஆலையை கண்டுபிடித்துள்ளார். அந்தப்பகுதியில் சுமார் 40 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் இரும்பு கசடுகளும் உருக்கப்பட்ட இரும்புகளும் நிரம்பி கிடக்கின்றன.


Heavy Rains: மக்களே! நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு மிக கனமழையாம்! எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம்!


இரும்பு உருக்கு ஆலைகள் இருந்ததற்கான தடயங்கள்


மூல வைகை ஆற்றுபகுதியில் பல இடங்களில் இரும்புக்கசடுகள் கிடைத்தாலும், பெரிய அளவில் இரும்பு உருக்கு ஆலைகள் இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை. இரும்பை உருக்க உலைகள் அமைத்து செம்பிரங்கல் போன்ற கல்லாளான மூலப்பொருள்களை உலைகள் மூலம் கொதி நிலைக்குக்கொண்டு வந்து, கற்களில் இருந்து இரும்பை பிரித்தெடுத்து இருக்கின்றனர்.


அப்படியான குவியல்கள் இரும்புக்கழிவு குவியல்களாக இங்கு கிடக்கின்றன. சுடு மண்ணால் ஆன குழாய்கள் சிதைவுற்ற நிலையில் குவியலாக பல இடங்களில் கிடக்கின்றன. இவை உலை அமைப்புகளை எரியூட்டுவதற்காக துருத்தி போல தூரத்திலிருந்து காற்றை செலுத்த பயன்படுத்தப்பட்டுள்ளன .


Rajasthan Girl: கூட்டு பலாத்காரத்தால் சிறுமி உயிரிழப்பு! உடன் படிக்கும் மாணவனே செய்த கொடூரம்!


Vaikasi Rasipalan: வைகாசி மாதத்தில் சூரியனும் குருவும் ஒரே ராசியில் - எந்தெந்த ராசிக்கு ஜாக்பாட்?


மேலும், இரும்பை உருக்கி கம்பி வடிவமாக கருவிகள் செய்வதற்கும் குழாய் அமைப்பை பயன்படுத்தி இருக்கலாம் இது குறித்து தமிழ் ஆசிரியர் செல்வம் கூறும் போது, பெருங்கற்காலத்தில் இங்கு அடர்த்தியாக இருந்த மக்கள் இரும்பு தொழில்நுட்பம் பற்றிய அறிவும், திறமையும் பெற்றிருந்தனர். இரும்பை உலையில் இருந்து பிரித்தெடுத்த பின் கத்தி, ஈட்டி, கோடாரி, வேல், எடை கற்கள் உள்ளிட்ட தங்களின் தேவைகளுக்கு ஏற்ப பல பொருள்களை தயாரித்து இங்கு தயாரிக்கப்பட்ட இரும்புப்பொருள்கள் வருசநாட்டுப்பகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ததோடு பிற பகுதிகளுக்கும்,




பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்திருப்பதை அறிய முடிவதாகவும் மேலும் இந்த மூல வைகை ஆற்றங்கரையோரபகுதிகளில் பழங்காலமக்கள் வாழ்ந்ததற்கான நினைவு சின்னங்களான முதுமக்கள் தாழி, கல் பதுக்கைகள், கல் திட்டுக்கள் தொடர்ந்து ஆங்காங்கே கண்டுபிடிக்கபடுவதால் ஒரு நாகரிகமான சமூகமக்கள் இங்கு வாழ்ந்ததற்கான சான்றுகள் தெரிய வருவதற்கு தொல்லியல்துறையினர் இங்கு அகழாய்வு செய்து ஆவணம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.