✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Rajasthan Girl: கூட்டு பலாத்காரத்தால் சிறுமி உயிரிழப்பு! உடன் படிக்கும் மாணவனே செய்த கொடூரம்!

செல்வகுமார்   |  16 May 2024 07:19 AM (IST)

ராஜஸ்தான் மாநிலத்தில் தன்னுடன் படிக்கும் மாணவியை ஏமாற்றி 5 நபர்கள் கூட்டு பலாத்காரத்தில், உயிரிழந்த கொடூர சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டு பலாத்காரத்தால் சிறுமி உயிரிழப்பு: image credits: pixabay

ராஜஸ்தான் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டு பலாத்காரம்:

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் 17 வயது சிறுமி படித்து வந்திருக்கிறார். கடந்த 10 ஆம் தேதி இவருடன் படிக்கும் மாணவன் உடற்பயிற்சி கூடத்தை காட்டுவதாக கூறி, சிறுமியை அழைத்துச் சென்றுள்ளான். அப்போது உடற்பயிற்சி கூடத்துக்கு சென்றவுடன் சிறுமிக்கு மயக்க பொருளை கொடுத்து மயக்கமடையச் செய்யப்பட்டுள்ளார்.

அதையடுத்து, மயக்கமடைந்த அப்பாவி சிறுமியை, அந்த மாணவன் உட்பர் 4 நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர்.  இதையடுத்து, சிறுமியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு உடற்பயிற்சி கூடத்தை மூடிவிட்டு தப்பித்துச் சென்றனர். 

கண்டுபிடித்தது எப்படி? 

சிறுமி பூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தை உரிமையாளர் திறக்கையில், சிறுமையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.  நிலைமையை அறிந்த உடற்பயிற்சி உரிமையாளர், சிறுமியை மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். சிறுமி உடல் மோசமான நிலையில் அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.

 படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்று தகவல் தெரிவிக்கிப்படுகிறது. இந்த சம்பவம் நடந்ததையடுத்து சிறுமி,  விசம் அருந்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமி மருத்துவமனிக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. இச்சம்பவமானது , பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி இறப்பதற்கு முன்பு என்ன நடந்தது என்பது குறித்து, யார் எல்லாம் காரணம் குறித்து அவரது தாயிடம் தெரிவித்துள்ளார். 

வழக்குப்பதிவு:

இதற்கிடையில், சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த குற்றச் சம்பவம் தொடர்பாக ஐந்து சிறுவர்கள் சேர்ந்து கூட்டுப் பலாத்காரம் செய்தது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்று தகவல் தெரிவிக்கின்றன. மேலும், அப்பகுதியில், நிலைமையை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய,  கூடுதலாக காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 இச்சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Also Read: இரவு கடை வாசலில் நிறுத்திய வாகனம் - காலையில் கண்விழித்து பார்க்கையில் மாயம் - மாட்டிய இளைஞர்கள்

Also Read: விளையாட்டு மைதானத்தில் குடிக்க சென்ற போலீஸ் - பீர் பாட்டிலால் தாக்கிய இளைஞர்கள் ?

Published at: 16 May 2024 07:16 AM (IST)
Tags: crimenews Crime Rajasthan Girl
  • முகப்பு
  • க்ரைம்
  • Rajasthan Girl: கூட்டு பலாத்காரத்தால் சிறுமி உயிரிழப்பு! உடன் படிக்கும் மாணவனே செய்த கொடூரம்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.