தேனி மாவட்டம் போடியில், குரங்கணி சாலையில் ஏலக்காய் நறுமண பொருட்கள் விற்பனை வாரியம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தேனி மாவட்டம், கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் விளையும் ஏலக்காய்கள், இந்த வாரியத்துக்கு கொண்டு வரப்பட்டு ஆன்லைன் ஏல அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் நடப்பாண்டில் விளைந்த ஏலக்காய்களை விற்பனைக்காக போடி ஏலக்காய் நறுமண வாரியத்தில் விவசாயிகள், வியாபாரிகள் பதிவு செய்வார்கள்.


School Teachers Transfer: ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணியிட மாற்றம் கிடையாது: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு



அதன்படி, கடந்த வாரம் ஒரே நாளில் 80 டன்னுக்கு மேலாக ஏலக்காய்கள் விற்பனைக்கு வந்தன. பின்னர் ஆன்லைன் மூலம் ஏலக்காய் விற்பனை ஏலம் நடைபெற்றது. இதில், முதல்தர ஏலக்காய் கிலோ ரூ.1,300 வரையில் விற்பனையானது.


Rohit Sharma: வருத்தத்தைக் கொட்டிய பும்ரா - சூர்யகுமார் யாதவ்; அணியில் இருந்து வெளியேறுகின்றார்களா?


சராசரி ஏலக்காய் ஒரு கிலோ ரூ.1,100-க்கும் விற்பனையானது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல்தர ஏலக்காய் கிலோ ரூ.1700-க்கும், சராசரி ஏலக்காய் ரூ.1,500-க்கும் விற்றது. ஆனால் தற்போது அவற்றின் விலை  குறைந்துள்ளது. ஏலக்காய் விலை தற்போது குறைந்துள்ளது குறித்து ஏலக்காய் விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு ஏலக்காய் அதிகம் விளையும் கேரள மாநில பகுதியில் சாராசையாக மழை பெய்த நிலையாலும் ஏலக்காய் விவசாயம் செய்வதில் வேலை ஆட்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்தனர்.



அதேபோல் கடந்த வாரங்களில் கேரளாவில் அதிக மழை பெய்த சில இடங்களில் ஏலக்காய் செடிகளில் அழுகல் நோய் ஏற்பட்டதாகவும். இதுதவிர கேரளாவில் அதிக காற்று வீசுவதால், ஏலக்காய் செடிகள் ஒன்றோடு ஒன்று உரசி ஏலக்காய்களும், பிஞ்சுகளும் உதிர்ந்ததாலும் இதனால் ஏலக்காய் கொள்முதல் செய்வதில் சிக்கல் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.


தேனியில் தொடர் மழை எதிரொலி...ஏலக்காய் கிலோ ரூ.1,500-க்கும், அதிகபட்சமாக விலை ரூ.1,900-க்கும் ஏலம் போனது


இந்த சூழ்நிலையில் எதிர்கால லாபத்தை கணக்கிட்டு கூடுதல் விலைக்கு ஏலக்காய்களை வியாபாரிகள் கொள்முதல் செய்து இருப்பு வைப்பது சற்று அதிகரித்துள்ளதாலும் இன்னும் வடமாநில ஏலக்காய் வியாபாரிகள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோருக்கு ஏற்றுமதி ஆர்டர் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றனர். மேலும் ஏலக்காய் சீசன் ஜனவரி மாதம் கடைசி வரையில் இருப்பதால் ஏலக்காய் விலை இன்னும் உயரும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.