தேனி: அறுவடை செய்த நெல்லை கமிஷன் கேட்டு கொள்முதல் நிலையத்தை திறக்க விடாமல் தடுத்து வருவதாக திமுக பிரமுகர் மீது நெல் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். கடந்த 20 நாட்களாக கொள்முதல் செய்யப்படாமல் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் அனைத்தும் மழையில் நனைந்து சேதம் அடையும் முன் அரசு தலையிட்டு அறுவடை செய்து குவிக்கப்பட்டுள்ள நெல்லையும், அறுவடை செய்யாமல் நிலத்தில் இருக்கும் நெற்கதிரையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Twitter X: ஆல் இன் ஆலாக மாறும் ’எக்ஸ்’...பணப்பரிமாற்றம் முதல் உணவு விநியோகம் வரை...எலான் மஸ்கின் மாஸ்டர் பிளான்!




தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் இரண்டாம் போக நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்பொழுது கடந்த 20 நாட்களாக அறுவடை பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக அப்பகுதியில் அரசு இரண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்து விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்வது வழக்கம்.


Annamalai Yatra: கூட்டணி கட்சிகளுக்கு தூண்டில் போடும் அண்ணாமலை..பாத யாத்திரை மூலம் அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக...!


ஆனால் இந்த ஆண்டு ஆளும்  கட்சியை சேர்ந்த திமுக பெரியகுளம் ஒன்றிய துணைச் செயலாளர் பாஸ்கரன் என்பவர் தலையிட்டு விவசாயிகள் நெல் அறுவடை செய்து கொள்முதல் நிலையத்தில் கொண்டுவரும் விவசாயிகளிடம் நெல் மூடைக்கு பத்து ரூபாய் வரை கமிஷன் கேட்டு, திறந்த நெல் கொள்முதல் நிலையத்தை செயல்படுத்த விடாமல் தடுத்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.




கடந்த இரண்டு தினங்களாக அவ்வப்பொழுது சாரல் மழை பெய்து வருவதால் விவசாயிகள் அறுவடை செய்து கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள பதினையாயிரத்துக்கும் மேற்பட்ட மூடை கொள்ளளவு கொண்ட நெல் அனைத்தும் மழையால் சேதம் அடையும் சூழல் உருவாகியுள்ளதாகவும், மேலும் கொட்டி வைக்க இடம் இல்லாத நிலையில் அறுவடை செய்யப்படாமல் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள நெல் முழுவதும் விலை நிலத்திலேயே சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிப்பதோடு,


Draupadi Murmu TN Visit: அடுத்த மாதம் தமிழ்நாடு வரும் குடியரசுத் தலைவர் முர்மு; என்ன காரணம்?




Trichy: முதல்வர் வருகையால் திருச்சி - திண்டுக்கல் சாலையை அவசர அவசரமாக புதுப்பிக்கும் அதிகாரிகள்


அரசு உரிய நடவடிக்கை எடுத்து ஆளும் கட்சி பிரமுகரின் தலையீட்டால் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாமல் இருப்பதை  மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் கொள்முதல் செய்யப்படாமல் தடுத்து நிறுத்தும் திமுக பெரியகுளம் ஒன்றிய துணைச் செயலாளர் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண