கொட்டோ கொட்டுனு கொட்டுது மழை..! தேனி மாவட்ட அணைகளின் நீர்வரத்து இன்றைய நிலவரம்

முல்லை பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழையால் அணையின் நீர் மட்டமானது தற்போது 130.95 அடியாக உள்ளது.

Continues below advertisement

தமிழக, கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனம் மற்றும் நீர் ஆதாரமாக இந்த அணை விளங்குகிறது. 152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி வரை தண்ணீரை தேக்கி கொள்ளலாம்.

Continues below advertisement

School Leave: கனமழை எதிரொலி - தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

 

இந்த நிலையில் இந்த மாதம் ஆரம்பத்திலிருந்தே அணையின் நீர் மட்டமானது உயரத்தொடங்கியது. முல்லை பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் கன மழையால் அணையின் நீர் மட்டமானது தற்போது 130.95 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 785 கன அடியாக இருந்தது. நீர் வெளியேற்றம் வினாடிக்கு 105 கன அடியில் இருந்து 300 கன அடியாக அதிகரித்துள்ளது.

IND Vs NZ knock Out: இந்தியாவை ரவுண்டு கட்டி அடிக்கும் நியூசிலாந்து..! நாக்-அவுட் சுற்று தொடர் தோல்விகளுக்கு பழி தீர்க்குமா?

அதே போல் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்தது. இதன் காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு மேலாக அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  சில தினங்களாக மாவட்டத்தில் பெய்த மழையால் வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் சோத்துப்பாறை, மஞ்சளாறு, வைகை அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தற்பொழுது அணையில் நீர் இருப்பு அணையின் முழு கொள்ளளவான 71 அடியில் 70.40 அடியாக உள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்து அணைக்கு நீர்வரத்து 741 கன அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து நீர் திறப்பு 969 கன அடியாக உள்ளது.

Latest Gold Silver Rate November13, 2023: மீண்டும் ஏறத் தொடங்கிய தங்கம் விலை.. கலக்கத்தில் நடுத்தர மக்கள்...

தேனி மாவட்டத்தில் மற்ற அணைகளின் இன்றைய நிலவரம்.

வைகை அணை

நிலை- 70.41 (71)அடி
கொள்ளளவு: 5934 Mcft
நீர்வரத்து: 748கனஅடி
வெளியேற்றம் : 969குசெக்வெசிட்டி

மஞ்சலார் அணை:
நிலை-54.70(57) அடி
கொள்ளளவு:429.710Mcft
வரத்து: 170கனஅடி
வெளியேற்றம்:100கியூசெக்

சோத்துப்பாறை அணை:

நிலை- 70.41 (126.28) அடி
கொள்ளளவு: 5934Mcft
நீர்வரத்து: 748கனஅடி
வெளியேற்றம்: 969 கனஅடி

சண்முகநதி அணை:

நிலை-52.50(52.55)அடி
கொள்ளளவு:79.57 Mcft
வரத்து: 3 கனஅடி
வெளியேற்றம்: 0 கியூசெக்.

Continues below advertisement
Sponsored Links by Taboola