இந்த சுற்றுலா ரயிலுக்கு மதுரை பகுதி சுற்றுலா பயணிகள் பயண சீட்டுகள் பதிவு செய்ய 8287931977 மற்றும் 8287932122 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் www.irctctourism.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்து கொள்ளலாம்.
சுற்றுலா ரயில்:
டிசம்பர் மாதத்தில் திருவனந்தபுரம் கொச்சுவேலியில் இருந்து மதுரை வழியாக உடுப்பி, முகாம்பிகை, சிருங்கேரி, கோவா சுற்றுலா ரயில் இயக்க இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி இந்த ஆன்மீக சுற்றுலா ரயில் டிசம்பர் 7 அன்று அதிகாலை 12.30 மணிக்கு திருவனந்தபுரம் கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு கொல்லம், செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை (புறப்படும் நேரம் காலை 07.30 மணி), திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், சென்னை, காட்பாடி, சேலம், ஈரோடு, போத்தனூர், பாலக்காடு வழியாக சென்று டிசம்பர் 8 இரவு 07.30 மணிக்கு கோவா மட்கான் சென்று சேரும்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக டிசம்பர் 9, 10 ஆகிய நாட்களில் உடுப்பி, முகாம்பிகை கோவில், முருதேஷ்வர் கோவில், சிருங்கேரி சாரதா கோவில், ஹரநாடு அன்னபுரேஷ்வரர் கோவில் தரிசனம் செய்து சுற்றுலா பயணிகளின் சொர்க்கம் கோவாவில் உள்ள சுற்றுலா தலங்களையும் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்பு சுற்றுலா ரயில் கோவா மட்கானிலிருந்து டிசம்பர் 10 அன்று இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு டிசம்பர் 12 அன்று காலை 07.35 மணிக்கு மதுரை வந்து சேரும்.
மீண்டும் மதுரையிலிருந்து காலை 07.40 மணிக்கு புறப்பட்டு மாலை 03.30 மணிக்கு திருவனந்தபுரம் கொச்சுவேலி சென்று சேரும். இந்த சுற்றுலா ரயிலுக்கு மதுரை பகுதி சுற்றுலா பயணிகள் பயண சீட்டுகள் பதிவு செய்ய 8287931977 மற்றும் 8287932122 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் www.irctctourism.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்து கொள்ளலாம்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: பழிக்குப்பழி.. பெங்களூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர்.. பகீர் சி.சி.டி.வி.காட்சி..!